Published:Updated:

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தனது மனைவியை நாளை ஆஜர்படுத்த வேண்டும்! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு

08-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

08 Oct 2020 12 PM

எம்.எல்.ஏ பிரபு தனது மனைவியை ஆஜர்படுத்த வேண்டும்!

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, தனது மனைவி சவுந்தர்யாவை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

முன்னதாக சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன், `என்னுடைய மகளை ஆசைவார்த்தைகள் கூறி, அவரை திசைதிருப்பி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு கடத்திவிட்டார்’ எனப் புகார் தெரிவித்திருந்தார். எனினும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, ``எனது திருமணம் குறித்து சில தவறான வதந்திகள் வலம்வருகின்றன. நான் சவுந்தர்யாவைக் கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வற்புறுத்திக் கல்யாணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோல எதுவும் நடக்கவில்லை. நாங்க கடந்த நான்கு மாதங்களாகக் காதலித்துவருகிறோம். சவுந்தர்யாவின் வீட்டுக்குச் சென்று, முறையாகப் பெண் கேட்டோம். பெண் வீட்டார் தர மறுத்தனர். அதனால் எனது வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது” என்று வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு