Published:Updated:

டெல்லி: குடியரசு தினத்தில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை... நடிகர் தீப் சித்து கைது! #NowAtVikatan

தீப் சித்து
தீப் சித்து ( ANI )

09-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Feb 2021 9 AM

நடிகர் தீப் சித்து கைது!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய முன்வராத காரணத்தால் கடந்த குடியரசு தினம் அன்று, டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்தனர். அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் போராட்டகாரர்களில் சிலர், திட்டமிட்ட பாதையைத் தவிர்த்துவிட்டு செங்கோட்டையை நோக்கி நகர்ந்தனர். இதனால் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரம் ஆனது.

டெல்லி செங்கோட்டை வன்முறை
டெல்லி செங்கோட்டை வன்முறை
ANI

டெல்லியில் அன்று நடைபெற்ற கலவரத்துக்கு, நடிகர் தீப் சித்துதான் காரணம் என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. போலீஸாரால் தீப் சித்து மீது வழக்கு பதியப்பட்டது. இந்தநிலையில், தீப் சித்து தலைமறைவானார். மாயமான தீப் சித்து குறித்துத் தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று தீப் சித்து கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு