Published:Updated:

சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை! #NowAtVikatan

மழை
மழை

9.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Apr 2020 4 PM

சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை!

சென்னையில் மழை இடம் : அடையார்

Posted by Vikatan EMagazine on Thursday, April 9, 2020

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, அண்ணா நகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.

காற்றுடன் கூடிய மழை இடம் வண்டலூர் வீடியோ அசோக்குமார்.தே

Posted by Vikatan EMagazine on Thursday, April 9, 2020
09 Apr 2020 12 PM

ஒடிசாவில் ஏப்.30 வரை ஊரடங்கு!

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். மேலும் கல்வி நிலையங்கள் ஜுன் 17 வரை மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் குறையாததால் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

09 Apr 2020 12 PM

மருத்துவரையும் விட்டுவைக்காத கொரோனா!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம், இந்தூர் நகரில் மட்டும் கொரோனா நோய்க்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

09 Apr 2020 10 AM

இந்தியாவில் ஒரேநாளில் 540 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 5,734 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில், 166 பேர் இறந்துள்ளனர். 473 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, உலகளவில் கொரோனா உயிரிழப்பில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,792 ஆக இருந்த நிலையில் அமெரிக்காவில் 14,795 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் தொடரும் மரணங்கள்!

கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு 17,669 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 542 பேர் பலியாகியுள்ளனர். 1,39,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இத்தாலி கொரோனா உயிரிழப்பில் முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு