Published:Updated:

`தமிழகத்தில் இதுவரை இல்லாத பாதிப்பு; சென்னையில் 25 ஆயிரத்தை நெருங்கும் எண்ணிக்கை!' - கொரோனா அப்டேட்ஸ் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

9.6.2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

09 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 21 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது.

09 Jun 2020 12 PM

தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து; ஆல்பாஸ்!

வருகிற 15-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு
தேர்வு

அதேபோல், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவிகிதமும் வருகைப் பதிவை அடிப்படையாகக் கொண்டு 20 சதவிகித மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதேபோல், தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்பட இருந்த மறுதேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

09 Jun 2020 12 PM

10,000-த்தை நெருங்கும் தினசரி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,611 இலிருந்து 2,66,598 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 9,987 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 266 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதேபோல், இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 2,66,598 பேரில் 1,29,215 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,135-இலிருந்து 7,466 ஆக அதிகரித்திருக்கிறது.

09 Jun 2020 11 AM

15 நாள்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள்!

புலம்பெயர்த் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களைக் கண்டறிந்து 15 நாள்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

புலம்பெயர்த் தொழிலாளர்கள்
புலம்பெயர்த் தொழிலாளர்கள்
தே.அசோக் குமார்

புலம்பெயர்த் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. அதேபோல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தொடர்பாக மாநில அரசுகள் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்துக்குள் அந்த வசதியை ஏற்படுத்தித் தரவும் ரயில்வே துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

`உணவு, தண்ணீர் இல்லாததால் தொழிலாளர்கள் இறக்கவில்லை!’ -உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசு
அடுத்த கட்டுரைக்கு