Published:Updated:

Corona Live Updates: `ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு’ - தமிழக கொரோனா நிலவரம்

corona
corona

9.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Jul 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்:

தமிழகத்தில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 65 ஆகக் கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.

Corona Live Updates: `ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு’ - தமிழக கொரோனா நிலவரம்

சென்னையில் மேலும் 1,216 பேருக்கு தொற்று

சென்னையில் மட்டும், இன்று 1,216 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து ஆறாவது நாளாக 2,000-க்கும் குறைவாக பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,728ஆக அதிகரித்துள்ளது.

09 Jul 2020 10 AM

இந்தியாவில் 25,000-த்தை நெருங்கும் தினசரி பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,129 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,76,378 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,64,789 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை: `கொரோனா கொல்லி' மைசூர்பா! - ஸ்வீட் கடைக்கு சீல்; உரிமமும் ரத்து

மகாராஷ்டிராவில் 2,23,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 1,23,192 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 9,448 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 Jul 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,55,405 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 70,25,062 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,51,184 ஆக உயர்ந்துள்ளது.

Corona
Corona
Pixabay
கொரோனா: திங்களன்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?

உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,58,734 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 61,650 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், பலி எண்ணிக்கை 882 அதிகரித்த நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் 1,34,854 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு