Published:Updated:

`விமான நிலைய இந்தி சர்ச்சை!’- கனிமொழி புகார்; விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு #NowAtVikatan

கனிமொழி
கனிமொழி

9.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Aug 2020 7 PM

`இந்தி தெரிந்தால்தான் இந்தியரா?’

விமானநிலையத்தில் இந்தி தெரியாததால், தன்னை இந்தியரா என சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி ட்விட்டரில், ``விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாது என்பதால், என்னிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், `நீங்கள் இந்தியரா?’ என்று கேள்வி எழுப்பினார். இந்தி தெரிந்திருந்தால்தான் இந்தியரா?’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மொழி தொடர்பாக யாரிடமும் கேட்பதில்லை எனவும் அது தங்களது கொள்கை இல்லை என்றும் சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

`தி.மு.க-வில் இளம் மகளிர் அணி!’ - ராஜினாமா கொந்தளிப்பில் கனிமொழி?
09 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,901-ஆக உயர்ந்துள்ளது.

corona
corona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,020 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,38,638 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 119 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4927 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா `மருந்து'… கூவிய ராம்தேவ்… அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னையில் மேலும் 989 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,117 ஆக அதிகரித்துள்ளது.

09 Aug 2020 5 PM

ஹைதராபாத் கொண்டுசெல்லப்படும் அம்மோனியம் நைட்ரேட்!

சென்னை மணலியில் இருந்து அம்மோனியம் நைட்ரேட்டை ஹைதராபாத் கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்த ஹைதராபாத் தனியார் நிறுவனம், கன்டெய்னர்கள் மூலம் சென்னையில் இருந்து எடுத்துச் செல்லகிறது. போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக லாரிகளில் அம்மோனியம் நைட்ரேட் கொண்டு செல்லப்படுகிறது.

`5 ஆண்டுகள்; 750 டன்!’ - லெபனான் விபத்துக்குக் காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் சேமிப்பு
09 Aug 2020 5 PM

பக்தர்களை வரவேற்கத் தயாராகும் கோயில்!

இடம்: சென்னை, படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் சிறிய கோயில், மசூதி, ஆலய வழிபாட்டுக்கு நாளை (திங்கள்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடுத்து தயாராகும் கோயில்.

ராமர் கோயில்... மோடியின் 28 ஆண்டுக்கால சபதம்!
09 Aug 2020 11 AM

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தின் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முழு ஊரடங்கால் சென்னையில் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சாலைகள். படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகியிருக்கிறது. மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்றவைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

மிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... உளவுத்துறை ரிப்போர்ட் - கண்டுகொள்ளாத எடப்பாடி!
அடுத்த கட்டுரைக்கு