Published:Updated:

`தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்!’ மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை #NowAtVikatan

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

10.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Apr 2020 8 AM

தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 6,000-ஐ கடந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் 6,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 504 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் 4 நாள்களில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

10 Apr 2020 10 AM

கொரோனா தொற்று எளிதில் பரவும் என்பதால் குளங்களில் மக்கள் குளிக்கக் கூடாது எனக் குமரி மாவட்ட போலீஸார் எச்சரித்து வருகின்றனர். வீடியோ: ஆர்.சிந்து

கொரோனா தொற்று எளிதில் பரவும் என்பதால் குளங்களில் மக்கள் குளிக்கக்கூடாது என குமரி மாவட்ட போலீஸார் எச்சரித்து வருகின்றனர். செய்தி, வீடியோ: ஆர்.சிந்து

Posted by Vikatan EMagazine on Thursday, April 9, 2020
10 Apr 2020 1 PM

திருச்சியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இளைஞர்!

துபாயிலிருந்து கடந்த மாதம் 22 ஆம் தேதி திருச்சி வந்த ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கொரோனா உறுதி செய்யப்பட்டு,...

Posted by Vikatan EMagazine on Friday, April 10, 2020

துபாயிலிருந்து கடந்த மாதம் 22-ம் தேதி திருச்சி வந்த ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

10 Apr 2020 2 PM

மேலும் 14 நாள்கள்கள் ஊரடங்கு?!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர், 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவக் குழுவினர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கின்றன. எனினும், தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றனர். மேலும் இந்தக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் குழு தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 14 நாள்கள் நீட்டிக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது. இதில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு