Published:Updated:

திடீர் நெஞ்சுவலி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி! #NowAtVikatan

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

10-05-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

10 May 2020 10 PM

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

நெஞ்சு வலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்தார் மன்மோகன் சிங். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில்கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டார். இந்நிலையில் தான் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது.

10 May 2020 9 PM

நாளை ரயில்களுக்கான முன்பதிவு!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பயணிகள் ரயில்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (11.05.2020) மாலை 4 மணி முதல் தொடங்கும் .முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. கன்பார்ம் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

10 May 2020 6 PM

இன்று 669 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது.

10 May 2020 3 PM

முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் அடுத்தகட்ட நடவடிக்கைள் எடுப்பது குறித்து முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

10 May 2020 1 PM

தமிழகம் வந்தடைந்த தொழிலாளர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று காலை திருச்சிக்கு வந்தடைந்தனர். அங்கிருந்து இயக்கப்பட்ட 30பேருந்துகளில் அனைவரும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை 30 பேருந்துகளில் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர் Video- dixith

Posted by Vikatan EMagazine on Sunday, May 10, 2020
10 May 2020 10 AM

`கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள்!’ - ரஜினி

ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக்கை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என பல கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ரஜினி
ரஜினி

இந்தவிவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிடுள்ள அவர், ``இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

ஆளும் தரப்பை அதிர்ச்சியடைய வைத்த மய்யத்தின் `மூவ்’ -டாஸ்மாக் வழக்கில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு