Published:Updated:

Corona Virus: தமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,914 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

corona
corona

10.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

10 Aug 2020 7 PM

தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,037 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 114 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,041 ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

சென்னையில் மேலும் 976 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 976 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: `சமூக பரவல் இல்லாமல் 100 நாள்கள்!’ - சாதித்த நியூசிலாந்து
10 Aug 2020 1 PM

பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 Aug 2020 12 PM

மூணாறு நிலச்சரிவு: 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடுமையாகப் பெய்து வரும் மழைக் காரணமாக மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளன. மூணாறை அடுத்த ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இடையே மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. நேற்று வரையில் நடைபெற்ற மீட்பு பணியில் 43 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை தொடங்கிய மீட்புப் பணிகளின்போது மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

10 Aug 2020 11 AM

கோயில்களில் வழிபாடு தொடக்கம்!

கோயில்களில் வழிபாடு தொடக்கம்! தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளில் சிறிய கோயில், மசூதி, ஆலய வழிபாட்டுக்கு இன்று முதல்...

Posted by Vikatan EMagazine on Sunday, August 9, 2020

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளில் சிறிய கோயில், மசூதி, ஆலய வழிபாட்டுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடுத்து வழிபாடுகள் தொடக்கம்

இடம்: சென்னை

10 Aug 2020 9 AM

வெளியானது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்வுகள் ரத்தான நிலையில் பள்ளி அளவில் நடைபெற்ற காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வு முடிவுகள் அடிப்படையில் மாணவ மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் கணக்கிடப்பட்டு அந்த விவரங்கள் இன்று காலை வெளியிடப்பட்டது.

தேர்வு
தேர்வு
மாதிரி படம்

பள்ளி மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், www.tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் மாணவர்கள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு