Published:Updated:

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்! #NowAtVikatan

வடிவேல் பாலாஜி
வடிவேல் பாலாஜி

10-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

10 Sep 2020 1 PM

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்!

வடிவேல் பாலாஜி
வடிவேல் பாலாஜி

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 42. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட அவர் சற்று முன்னர் காலமானார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல் போன்று நடித்து புகழ் பெற்றவர் வடிவேல் பாலாஜி. இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

10 Sep 2020 9 AM

இந்திய விமானப்படையில் இணைகிறது ரஃபேல்!

ரஃபேல்
ரஃபேல்

பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக, ஐந்து விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்தடைந்தன. இந்த விமானங்கள், அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் ஃபிளோரன்ஸ் பார்லி , முப்படைத் தளபதிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு