Published:Updated:

இணையப் பாதுகாப்புக்கான 10 டிப்ஸ்!

internet privacy
பிரீமியம் ஸ்டோரி
internet privacy

எச்சரிக்கை வழிமுறைகள்

இணையப் பாதுகாப்புக்கான 10 டிப்ஸ்!

எச்சரிக்கை வழிமுறைகள்

Published:Updated:
internet privacy
பிரீமியம் ஸ்டோரி
internet privacy

ணையத்தில் இன்று திரும்பும் திசையெல்லாம் பிரைவஸி சார்ந்த பிரச்னைகளும் சர்ச்சைகளும் சூழ்ந்துள்ளன. தகவல் திருட்டு என்பது மிக சர்வ சாதாரணமாக நடக்கிறது. நம் தனிப்பட்ட விஷயங்களும், பணம் சார்ந்த தகவல்களும் வெளியில் கசியும்போது பல இன்னல்களுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது.

இன்று நம் வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்துமே இணையத்தை நம்பியிருப்பதால், நிஜ வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு இணையத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், உறுமீனுக்குக் கொக்கு காத்திருப்பதுபோலக் காத்திருக்கும் ஆன்லைன் மோசடிக்காரர்களுக்கு நாம் இரையாக நேரிடும். இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான பத்து சிம்பிள் டிப்ஸ் இதோ...

internet privacy
internet privacy

பப்ளிக் வைஃபை ஆபத்துகள்!

இன்று ரயில் நிலையங்கள், மால்கள், ஹோட்டல்கள் எனப் பல இடங்களிலும் இலவச பப்ளிக் வைஃபை சேவை கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருங்கள். இதில் யார் வேண்டுமானாலும் கனெக்ட் ஆகியிருக்கலாம் என்பதால், வங்கி தொடர்பான முக்கியமான பரிவர்த்தனைகளை பப்ளிக் வைஃபை-களில் பயன்படுத்த வேண்டாம். இது போன்ற பப்ளிக் வைஃபை-களில் வி.பி.என் (VPN) வழி இணையம் பயன்படுத்துவது சிறப்பு.

சமூக வலைதளங்களின் பிரைவஸி செட்டிங்ஸ்!

சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்... உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்துமிருக்கும் இடமாக இருப்பவை சமூக வலைதளக் கணக்குகள். உங்கள் தகவல்களை அனைவராலும் எளிதாகப் பார்க்க முடியும். இந்தத் தளங்களில் அனைத்துமே ‘Public’ பிரைவஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால் மொபைல் நம்பர் போன்ற முக்கியத் தகவல்களை நண்பர்களுக்கு மட்டும் காட்டும்படியோ, யாருக்கும் எளிதில் தெரியாதபடியோ பிரைவஸியை செட் செய்துவிடுங்கள்.

முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமியுங்கள்!

இணையத்தில் இருக்கும் பப்ளிக் ஸ்டோரேஜ் சேவைகளை மிகவும் முக்கியமான தகவல் களைச் சேமிக்கப் பயன்படுத்தாதீர்கள். அதாவது பாஸ்வேர்டு போன்ற தகவல்களைக் கூகுள் டாக்ஸில் சேமிப்பது பாதுகாப்பானதல்ல. மற்ற முக்கிய ஆவணங்களையும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஸ்டோரேஜ்களில் மட்டுமே சேமியுங்கள்.

இணையத்தில் இருக்கும் பப்ளிக் ஸ்டோரேஜ் சேவைகளை மிகவும் முக்கியமான தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தாதீர்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ட்ராக்கர்களைத் தவிர்க்கலாம்!

நீங்கள் ஓர் இணையதளத்துக்குச் செல்கிறீர்கள் என்றால், உங்கள் பிரவுசரிலிருந்தே உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பு, வெறுப்பு பற்றியும் தகவல்களைப் பெற்று உங்களைக் குறிவைத்து விளம்பரங்களைக் காட்டுவார்கள். இதை ‘Incognito’ மோடில் பிரவுஸ் செய்வதன் மூலம் மட்டுமே தடுத்துவிட முடியாது. பிரத்யேகமாக ட்ராக்கர்களை பிளாக் செய்யும் மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, நம் பிரைவஸி தொடர்பான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

internet privacy
internet privacy

எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன்!

இன்று மெசேஜிங் ஆப்கள் அனைத்துமே எனகிரிப்ஷன் பயன்படுத்துகின்றன. ஆனால், சேவை அளிக்கும் நிறுவனத்தின் சர்வர்களிலேயே மெசேஜ் டீகிரிப்ட் (Decrypt) செய்யப்பட்டுச் சேமிக்கப்படுகின்றன.

இப்படியான நிலையில் அந்த சர்வரை யாராவது ஹேக் செய்துவிட்டால், உங்கள் பிரைவஸி தொடர்பான தகவல்கள் அனைத்தும் பறிபோய்விடும். இதனால் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் இருக்கும் சேவைகளை மெசேஜ் அனுப்பப் பயன்படுத்துங்கள். இப்படியான செட்டப்பில் அனுப்புநரின் ஒரு மெசேஜ் பெறுநர் இடத்தில்தான் டீகிரிப்ட் செய்யப்படும். அதாவது, உங்களுக்குச் சேவை வழங்கும் நிறுவனத்தால்கூட உங்கள் மெசேஜைப் பார்க்க முடியாது.

வாட்ஸ்அப் என்பது எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷனைப் பயன்படுத்தும் சேவை. ஆனால், ஃபேஸ்புக் மெசெஞ்சர், டெலிகிராம் போன்ற சேவைகளில் இதை நீங்களாகத்தான் ஆன் செய்ய வேண்டும்.

பெயர், பிறந்த தேதி போன்றவற்றை பாஸ்வேர்டுகளாக வைக்க வேண்டாம். எண், எழுத்து, ஸ்பெஷல் கேரக்டர்கள் எனக் கலவையாக பாஸ்வேர்டுகள் இருப்பது நல்லது!

பாஸ்வேர்டு முக்கியம் பாஸ்!

எல்லாவற்றிலும் கவனமாக இருந்துவிட்டு, மிகவும் அடிப்படையான பாஸ்வேர்டு விஷயத்தில் பலரும் கோட்டைவிட்டு விடுவார்கள். இன்று செயற்கை நுண்ணறிவு தொட்டிருக்கும் உச்சத்தில் பலராலும் எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டு களை வைப்பது மிகவும் ஆபத்தானது.

உங்கள் பெயர், பிறந்த தேதி போன்றவற்றை பாஸ்வேர்டுகளாக வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண், எழுத்து, ஸ்பெஷல் கேரக்டர்கள் எனக் கலவையான பாஸ்வேர்டு களையே அனைத்துவிதமான சேவைகளுக்கும் வையுங்கள். ஒரே பாஸ்வேர்டை எல்லாக் கணக்குகளுக்கும் பயன்படுத்தாதீர்கள். இதை எளிதாக்க lastpass, 1password போன்ற பாஸ்வேர்டு மேலாண்மை மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்.

அனுமதி கொடுக்கும் முன்னர் யோசியுங்கள்!

ஆண்ட்ராய்டு ஆப்களை இன்ஸ்டால் செய்தவுடன் அவை லொகேஷன், கேமரா, மைக், கான்டாக்ட்ஸ் போன்றவற்றைப் பெற அனுமதி கேட்கும். அவற்றைக் கொடுப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். உண்மையில் அந்த ஆப்பின் செயல்பாட்டுக்கு அந்த அனுமதி தேவையென்றால் மட்டும் அதற்கு அனுமதி கொடுங்கள்.

பேட்டர்ன்களிலும் கவனம் வேண்டும்!

நம் தனிநபர் தகவல்கள் அதிகம் கொட்டிக்கிடப்பது எதிலென்றால் நமது போனிலும், பர்சனல் கம்ப்யூட்டரிலும்தான். எனவே, அவற்றை முடிந்த அளவு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இன்று பெரும்பாலும் அனைவரும் போன்களை லாக் செய்துதான் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் எளிதான பேட்டர்ன்/பாஸ்கோடு வைக்காதீர்கள்; அனைவரிடமும் அதைப் பகிர்ந்து கொள்ளா தீர்கள். உங்கள் போனில் ஃபிங்கர்ப்ரின்ட், ஃபேஸ் அன்லாக் இருந்தால் சிறப்பு. ஆனால், இதன் மூலமும் முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது என்பதால் பேட்டர்ன்/பாஸ்கோடு மிகவும் முக்கியம்.

லாக் ஸ்க்ரீன் நோட்டிஃபிகேஷன்!

பல போன்களில் லாக் ஆகி இருந்தாலும் லாக் ஸ்க்ரீனில் நோட்டிஃபிகேஷன்கள் வரும். இதை ஆஃப் செய்துவைக்க வேண்டியது அவசியம்.

இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்க முடியும். வாட்ஸ்அப் சாட் முதல் ஓ.டிபி (OTP) மெசேஜ் வரை நோட்டிஃபிகேஷன்களாகவே வரும் என்பதால், லாக் ஸ்க்ரீன் நோட்டிஃபிகேஷன் களை உங்கள் மொபைலில் ஆஃப் செய்து வைப்பதே பாதுகாப்பானது.

இந்த பத்து விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருந்தாலே, உங்கள் பிரைவஸி தொடர்பான தகவல்கள் ஓரளவுக்கு பத்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.