‘உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்’ - ‘ஷாஜகான்’ திரைப்படப் பாடல் வரிகள் திண்டிவனத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதி மறுப்பு காதல் திருமணங்களை சட்டத்துக்குட்பட்டு நடத்திவைத்திருக்கிறார் இவர். இதுமட்டுமல்ல, அவர்களில் பலருக்கு அரசு வேலையையும் பெற்றுத் தந்து அசத்தியிருக்கிறார்.

எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்? பாலமுருகனைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘என் மனைவி ராபியா, இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், இருவர் தரப்பிலும் எங்கள் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு. 1989-ம் ஆண்டு வீட்டைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்துகொண்டோம். எப்படியோ உறவினர்களுக்கு விஷயம் தெரிந்து திருமணமான அன்றே எங்களைப் பிரித்துவிட்டனர். மூன்று வருடங்கள் வீட்டுச்சிறையில் பல்வேறு இன்னல் களைச் சந்தித்தோம். அதன் பிறகு, கடலூருக்குத் தப்பி வந்து திருமணம் செய்துகொண்டு, அதைப் பதிவுசெய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினோம்.

ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்கள். சாதி, மதத்தின் பேரில் நானும் என் மனைவியும்பட்ட அவமானங்கள் ஏராளம். அந்த அவமானங்கள்தான் ‘ஏதாச்சும் பண்ணணும்’ என்று எனக்குள் ஒரு தீயை உண்டாக்கின. அப்போது, சமூக ஆர்வலர்கள் சிலரின் நட்பு கிடைத்தது. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க 1988-ம் ஆண்டில் தமிழக அரசு பிறப்பித்த ஆணை அமல்படுத்தப்படாமல் இருப்பது அவர்கள் மூலம் தெரியவந்தது.

அதை அமல்படுத்த வைக்க என்ன செய்ய வேண்டும் என, நானும் என் நண்பர்களும் யோசித்தோம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களின் பாதுகாப்புக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவந்த சிறிய அளவிலான 17 சங்கங்களை இணைத்து, ‘தமிழக கலப்புத் திருமணத் தம்பதியர் சங்கம்’ என்ற பெயரில் பெரிய அளவிலான சங்கத்தை ஆரம்பித் தோம். 1993-ம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,33,000 ஆக உயர்ந்தது.

அதைத் தொடர்ந்து, ‘சாதி மறுப்புத் திருமணம் செய்தவர் களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசின் ஆணையை அமல்படுத்த கோரி’ பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். அதன் பலனாக 1994-ம் ஆண்டு அந்த அரசாணை கடலூர் மாவட்டத்திலும், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்தது. கடலூர் மாவட்டத்தில் அந்த அரசாணை அமலுக்கு வந்த உடனேயே பத்தாவது வரை படித்திருந்த என் மனைவிக்கு நீதிமன்றத்திலும், ப்ளஸ் டூ முடித்திருந்த எனக்கு போக்குவரத்துத் துறையிலும் வேலை கிடைத்தது. உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு அரசு வேலை கிடைத்தது, எல்லையில்லா மகிழ்ச்சியையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் கொடுத்தது’’ என்று நெகிழ்ச்சியுடன் விவரித்த பாலமுருகன், சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்...

‘‘சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வதால் குடும்பத்தினராலும் சமூகத்தாலும் ஒதுக்கிவைக்கப்படும் அனைவரும் இந்தச் சலுகையின் அடிப்படையில் அரசு வேலை பெறவேண்டும் என நினைத்தேன். தமிழகம் முழுவதும் பயணித்து இப்படியோர் அரசாணை இருப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன். எங்கள் சங்கத்தின் உதவியுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களை சட்டப்படி நானே முன்னின்று நடத்தி வைத்துள்ளேன். அதனால், ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். பல இடங்களில் அடியெல்லாம்கூட வாங்கியிருக்கிறேன். ஆனால், என் லட்சியத்திலிருந்து பின்வாங்கியதேயில்லை. சட்டத்தை மீறி நான் எதுவும் செய்தது கிடையாது. 21 வயதுக்குக் கீழுள்ள காதலர்கள் என்னிடம் உதவி கேட்டு வந்தால், நிச்சயம் உதவிசெய்ய மாட்டேன்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்ததுடன், அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ற அரசு வேலையையும் எங்கள் சங்கத்தின்மூலம் போராடிப் பெற்றுத் தந்துள்ளேன். போக்குவரத்துத் துறையில் மட்டும் 473 பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளேன். நீதிமன்றம், தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனப் பல்வேறு அரசுத் துறைகளிலும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பலருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளேன்’’ என்றவரின் குரல் சட்டென உடைகிறது.

‘‘அப்படி வேலை வாங்கியவர்களில் பலர், தான் உண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கிப்போய்விட்டனர். இதனால், சங்கம் நீர்த்துப்போய்விட்டது. கடந்த பத்து வருடங்களில் அரசு வேலையில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறைந்துவிட்டது. ஆட்சியில் உள்ளவர்கள் அப்படியான ஒரு சூழலை உருவாக்கிவிட்டனர். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள வருபவர்களுக்கு, பெற்றோரின் கையொப்பம் இல்லாமல் பதிவுசெய்ய அனுமதிக்கக் கூடாது என்று வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ள தாகச் சொல்லப்படுகிறது. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அரசே முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று சிலர் சொல்கின்றனர். விரைவில் இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன். எனக்கு இப்போது ஐம்பது வயது. முன்புபோல் தனி ஆளாக நின்று என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆகையால், கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு என அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளேன். சமூகநீதி ஆர்வலர்களை ஒருங்கிணைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்’’ என்றார்.