Published:Updated:

தொடர் கனமழையால் 100 அடியை எட்டிய சேர்வலாறு, அடவிநயினார் அணைகள்!

தொடர் கனமழையால் 100 அடியை எட்டிய சேர்வலாறு, அடவிநயினார் அணைகள்!
தொடர் கனமழையால் 100 அடியை எட்டிய சேர்வலாறு, அடவிநயினார் அணைகள்!

தொடர் கனமழையால் 100 அடியை எட்டிய சேர்வலாறு, அடவிநயினார் அணைகள்!

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, சேர்வலாறு, அடவிநயினார் அணைக்கட்டுகளில் தண்ணீர் வேகமாக உயர்ந்து, 100 அடியை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர் கனமழையால் 100 அடியை எட்டிய சேர்வலாறு, அடவிநயினார் அணைகள்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் மழையால், எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டத்திலும் மழை பெய்துவருகிறது. இதனால், குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகமாகிவருகிறது. சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர்.

தொடர்ச்சியாகப் பெய்யும் மழையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. நெல்லையின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம், கடந்த சில தினங்களில் மட்டும் 20 அடியைத் தாண்டியுள்ளது. கடந்த மாதம் இதேநாளில், அணையின் நீர்மட்டம் வெறும் 16 அடியாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது பெய்யும் மழையால் 89 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 728 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. குடிநீர்த் தேவைக்காக, அணையிலிருந்து 354.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர் கனமழையால் 100 அடியை எட்டிய சேர்வலாறு, அடவிநயினார் அணைகள்!

156 அடி கொள்ளளவுகொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த மழையால், இந்த அணை 100 அடியைக் கடந்துள்ளது. செங்கோட்டைப் பகுதியில், கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால், மேக்கரைப் பகுதியில் உள்ள அடவிநயினார் அணையானது, 100 அடியை எட்டியிருக்கிறது. 132 அடி கொள்ளளவுகொண்ட இந்த அணை, 100 அடியைக் கடந்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கும் நிலையில், சாகுபடிக்காக அணைகளிலி  ருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் நிலையில், விவசாயிகள் இன்னும் விவசாயப் பணிகளைத் தொடங்கவில்லை. அணைகளின் நீர் மட்டம், தொடரும் மழை ஆகியவற்றைக் கவனித்துவரும் விவசாயிகள், விரைவில் பணிகளைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு