Published:Updated:

காவிரி ஆணையக் கூட்டம்: டெல்லி செல்கிறார் ஜெயலலிதா!

Vikatan Correspondent
காவிரி ஆணையக் கூட்டம்: டெல்லி செல்கிறார்  ஜெயலலிதா!
காவிரி ஆணையக் கூட்டம்: டெல்லி செல்கிறார் ஜெயலலிதா!
காவிரி ஆணையக் கூட்டம்: டெல்லி செல்கிறார்  ஜெயலலிதா!

சென்னை: காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர்  ஜெயலலிதா டெல்லி செல்ல உள்ளார்.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு  வந்தது. அப்போது, காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பதற்கு  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, வரும் 19-ம் தேதி மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர்  இல்லத்தில் ஆணையத்தின் ஏழாவது கூட்டம் நடைபெற இருப்பதாக மத்திய நீர்வளத்  துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

##~~##
இதில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா வரும் 19-ம் தேதி காலை சென்னையில் இருந்து  விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
கூட்டத்தில் பங்கேற்ற பின், அன்றைய தினம் மாலையே அவர் சென்னை திரும்புவார்  என கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.