Published:Updated:

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வரும் 25-ம் தேதிக்குப் பிறகுதான் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்றும், தொடர்ந்து நீடிக்கும் தென்மேற்குப் பருவமழை வலுவிழக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது என்றும் அது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மேலும் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்... திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, வேலூர் மாட்டம் வந்தவாசியில் தலா 5 செ.மீட்டரும் காஞ்சிபுரத்தில் 4 செ.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் தலா 3 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு