முன்பெல்லாம் அழைத்தவுடன், அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குள் வந்துவிடும் 108 இலவச ஆம்புலன்ஸ். இது சராசரி நிலவரம். விதிவிலக்காகச் சில சம்பவங்கள் இருக்கலாம்.

ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரப் பரவலுக்குப் பிறகு, 108 இலவச ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. “கொரோனா நோயாளிகளுக்கு கணிசமான ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஹார்ட் அட்டாக், பிரசவம், விபத்து உள்ளிட்ட சமயங்களில் அவசரச் சிகிச்சைக்காகப் போராடுபவர்களுக்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன” என்று புகார்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

இது குறித்து நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமனிடம் பேசினோம். நம்மிடம், “நீங்கள் சொல்வது உண்மைதான். சமீபத்தில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரின் உறவினர்கள் 108 இலவச ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதியிலிருந்த எட்டு ஆம்புலன்ஸ்களில் ஆறு ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவற்றை அனுப்ப முடியாது என்று கூறிவிட்டார்கள். அந்த நேரம் பார்த்து மீதமிருக்கும் இரண்டு ஆம்புலன்ஸ்களும் வேறு பக்கம் சென்றுவிட்டன. மூன்று மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அந்த நோயாளி இறந்தேவிட்டார். ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன’’ என்றார் வருத்தத்துடன்.

‘‘ `கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன’ என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர்களை அழைத்துச் செல்லவும்கூட ஆம்புலன்ஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை’’ என்கிறார் மற்றொரு மருத்துவர்.

அரசு கொரோனா கேர் சென்டரில் பணிபுரியும் இவர், ‘‘கொரோனா கேர் சென்டர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு தொற்று வீரியமாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்கள் அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டுக்கு மாற்றப்படுவர். அப்படி நோயாளியை மாற்றுவதற்கே ஆம்புலன்ஸ்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; காலதாமதமாக வருகின்றன. கேட்டால், ‘ஆம்புலன்ஸ் பற்றாக்குறை’ என்கிறார்கள். இதனால், கொரோனா நோயாளிகளுக்கு உயிர் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது’’ என்றார் அவர்.

‘‘ஆந்திராவைச் சேர்ந்த ‘ஜி.வி.கே எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற தனியார் நிறுவனம்தான் தமிழகத்தில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்படுகிறது. தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்து 108-ஐ தொடர்புகொண்டாலும் இந்த மையத்திலிருந்துதான் பேசுவார்கள். பிறகு, அழைப்பு வந்த ஏரியாவிலிருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அந்தத் தொடர்பு எண் மற்றும் முகவரியைத் தெரிவிப்பார்கள்.

ஆனால், தற்போது அந்தச் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டால், ரிங் சென்ற சில நொடிகளில் தொடர்பு துண்டிக்கப்படு கிறது. அப்படியே அழைப்பு ஏற்கப்பட்டாலும், வண்டி வருவதில்லை; சில சமயங்களில் தாமத மாக வருகிறது” என்கிறார்கள் பாதிக்கப்பட்ட சிலர்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரிடம் பேசினோம். ‘‘சென்னையிலுள்ள 108 கட்டுப்பாட்டு அறை, லாக்டௌன் காரணமாக இப்போது இயங்கவே இல்லை. அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கிறார்கள். இதனால், அழைப்புகளை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் எங்களுக்குத் தவறான முகவரிகள் தெரிவிக்கப்படுகின்றன” என்றார்.

தமிழக 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையின் மாநில செயல் தலைவர் செல்வகுமாரிடம் பேசினோம். “108 இலவச ஆம்புலன்ஸ் சேவையில் தமிழகத்தில் ஏறக்குறைய 1,000 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இவற்றில் 225 ஆம்புலன்ஸ்களை கோவிட் சேவைக்காக ஒதுக்கியுள்ளோம். சென்னையில் மட்டும் 80 ஆம்புலன்ஸ்கள் கோவிட் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சிலர், `108 அழைப்பை ஏற்க தாமதம் ஆகிறது’ என்று புகார் சொன்னார்கள். அதனால், சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் ‘044-4006 7108’ என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளோம். சென்னையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு, தாமதமின்றி 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம்.

கோவிட் அல்லாத மற்ற அவசரச் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு எப்போதும்போல 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பற்றாக்குறை என்று சொல்ல முடியாது. லாக்டௌனால் சில நேரங்களில் தாமதம் ஆகலாம். கோவிட்-19 மற்றும் மற்ற எமர்ஜென்சி பிரச்னைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் தனித்தனியே அனுப்பப்படுவதில் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனாலும் தாமதம் நிகழலாம். விரைவில் குறைகளைச் சரிசெய்வோம்” என்றார்.

“ஸாரி சார்... தெரியாமல் நடந்துடுச்சு” என்று சொல்வதற்கு இது ஒன்றும் காலைத் தெரியாமல் மிதித்துவிடும் விஷயமல்ல, உயிர் காக்கும் விஷயம். ‘கோல்டன் ஹவர்’ என்கிற வகையில் ஒரு நொடியைக்கூட வீணாக்காமல் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டிய அதிமுக்கியச் சேவைதான் ஆம்புலன்ஸ். சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!