Published:Updated:

``நன்றி நெய்வேலி''- செல்பி படத்துடன் நடிகர் விஜய் டுவீட்! #NowAtVikatan

விஜய்
விஜய்

10.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

10 Feb 2020 9 AM

நேரில் ஆஜராகுங்கள்! - நடிகர் விஜய்க்கு ஐ.டி சம்மன்

பிகில் பட வருமான சர்ச்சை தொடர்பாக நடிகை விஜய்யை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. நெய்வேலி மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து சென்னை அழைத்து வந்து அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

10 Feb 2020 7 AM

முதல்முறையாக ஆஸ்கர் வென்ற பிராட் பிட்! #Oscars

லியானார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட்
லியானார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை நடிகர் பிராட் பிட் வென்றார்.

நடிப்புப் பிரிவின்கீழ் அவர் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும். இதற்கு முன் அவர் தயாரித்த `12 Years a Slave' படத்துக்காக, சிறந்த படத் தயாரிப்பாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருந்தார்.

சிறந்த பின்னணி இசை - Joker

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், திரைக்கதை - Parasite (தென்கொரியா)

10 Feb 2020 9 AM

4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட்; ஜோக்கர் படத்துக்கு 2 விருதுகள்!

ஜோக்கர் திரைப்படத்தில் நடித்த வாக்கீன் பீனீக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். நான்காவது முறையாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவர், முதல் முறையாக விருதை வென்றிருக்கிறார்.

`Judy' படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை நடிகை ரெனி ஜெல்வேகர் வென்றார்.

Joaquin phoenix - joker
Joaquin phoenix - joker

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை வென்ற தென்கொரியப் படமான `Parasite', சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வென்றது. அதேபோ, இந்தப் படத்தின் இயக்குநர் பாங் ஜூன் ஹோ, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரையும் வென்றார். மேலும், சிறந்த படமாகவும் அது தேர்வு செய்யப்பட்டது. அந்தப் படம் மொத்தம் 4 விருதுகளை வென்றுள்ளது.

10 Feb 2020 11 AM

பிப்ரவரி 17-ல் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தி.மு.க உள்கட்சி தேர்தல் வரும் 21-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமை கழகம் வரை உள்ள நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்தல் தொடர்பான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

க. அன்பழகன்
க. அன்பழகன்

இது தொடர்பான செய்திக் குறிப்பில், “தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் தி.மு.க உள்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது, அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 Feb 2020 9 PM

மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பெரிய பொருளாதாரமிக்க நாடாக இந்தியா வளர்ந்து வர வேண்டும். நம் நாட்டில் உயர்கல்வி படிக்கக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும், நாட்டின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவது என்பது அப்துல்கலாமின் கனவாக இருந்தது. இதற்காக, 2020 - ஆம் ஆண்டை இலக்காக வைத்திருந்தார். அந்தவகையில், 2020-25 - ஆம் ஆண்டில் மக்களின் நேர்மறையான எண்ணங்களினால், அந்த இலக்கினை எளிதாக அடையலாம். 2020-ல் நிலவுக்கு செல்வதற்கு ககன்யான் திட்டம் மூலம் செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. மனிதனை பத்திரமாக நிலவுக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பூமிக்கு திரும்ப கொண்டுவர வேண்டும்.

இந்த முயற்சிகள் எல்லாம் பரீட்சார்த்த முறையில் நடக்கின்றன. அந்த வகையில்தான், ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. தட்பவெட்பநிலை, கதிரியக்கம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு, மூன்று அடுக்குகளாக செயற்கைகோள் அனுப்பப்படும். ஆழ்துளைகிணறுகளில் மீட்பு பணியை மேற்கொள்ள கருவிகள் எல்லாம் இருக்கின்றன. எனினும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடி பாதுகாப்பு நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனினும், ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும். அப்போதுதான் ஆழ்துளை கிணறுகள் மூலம் குழந்தைகள் இறக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!" என்றார்.

10 Feb 2020 7 PM

நடிகர் விஜய் டுவீட்!

வருமான வரித்துறை ரெய்டால் நடிகர் விஜய் சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தன. எனினும் ரெய்டு முடிந்தபிறகு நெய்வேலி என்.எல்.சியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அங்கு பாஜகவினர் திரண்டு அவருக்கு எதிராக போராடியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் நெய்வேலி என்.எல்.சி.யில் கூடினர். நேற்று முன்தினம் படப்பிடிப்பிலிருந்து வெளியே வந்த விஜய், வேனில் மீது ஏறி ரசிகர்களைப்பார்த்துக் கையசைத்தார்.

மேலும் தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து செல்ஃபியும் எடுத்தார். இந்நிலையில் இந்த செல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள நடிகர் விஜய், ``நன்றி நெய்வேலி'' என்றும் பதிவிட்டுள்ளார். நெய்வேலியில் இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைவதை அடுத்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். விஜய் எடுத்த செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு