Published:Updated:

`உயிரிழந்த 8 பறவைகள்’ - டெல்லியிலும் பரவியதா பறவைக் காய்ச்சல்? #NowAtVikatan

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் ( AP Photo/Prakash Elamakkara )

11-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Jan 2021 10 AM

டெல்லியிலும் பறவைக் காய்ச்சல்?!

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொடர்ந்து பரவிவரும் நிலையில், தலைநகர் டெல்லியிலும் தற்போது பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் உயிரிழந்த எட்டு பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பறவைக் காய்ச்சல் உறுதியானதாகக் கூறப்படுகிறது.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

ஏற்கெனவே கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு