தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு... கமல்ஹாசனுக்கு அதிகாரம்! - ம.நீ.ம பொதுக்குழுவில் தீர்மானம் எனத் தகவல் #NowAtVikatan

11-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
கமல்ஹாசனுக்கு அதிகாரம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் கட்சியில் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்தநிலையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க கமல்ஹாசனுக்கு பொதுக்குழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது!
13-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுக்குழுக் கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 700 பேர் கலந்துகொள்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். வரும் தேர்தலில் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், கட்சி மாநாடு நடத்துவது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.