Published:Updated:

தமிழகத்தில் இன்று 798 பேருக்கு கொரோனா... சென்னையில் 4 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு #NowAtVikatan

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

11.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

11 May 2020 7 PM

இன்று 798 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 538 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4371 ஆக அதிகரித்துள்ளது.

11 May 2020 6 PM

அ.தி.மு.க பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!

விழுப்புரம் சிறுமதுரையைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அ.தி.மு.க கிளைக் கழக பொதுச்செயலாளர் கலியபெருமாள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முருகனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி இருவரையும் நீக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர்.

`என் அப்பா எங்கே....!’-முன்விரோதத்தால் எரிக்கப்பட்ட சிறுமி; அ.தி.மு.க நிர்வாகிகள் கைது
11 May 2020 5 PM

சென்னைக்கு ரயில் சேவை உடனடியாக வேண்டாம்!

பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த வார இறுதியில், மூன்றாம் கட்ட ஊரடங்கும் முடிவுக்கும் வரவுள்ள நிலையில், இந்தக் கூட்டம் இன்று மதியம் 3 மணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி இதில் கலந்துகொண்டு, தமிழகத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழகத்தில், மருத்துவ உபகரணங்களுக்கான சிறப்பு நிதியாக ரூ. 2,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பதால், வரும் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.

11 May 2020 4 PM

சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின்,``சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அ.தி.மு.க-வினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

11 May 2020 3 PM

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆரஞ்ச், பச்சை மண்டங்களில் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை நீங்கலாக தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. எனினும் சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் காரணம் சொல்லி, பல பொதுநல வழக்குகள் பதியப்பட்டன. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மே 17-ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை விதித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் மனுவில் பிழை உள்ளதால், உச்ச நீதிமன்றம் பிழையைச் சரிசெய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டால், நாளையே விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 May 2020 12 PM

பணிக்குத் திரும்பும் மக்கள்!

உரடங்கு தளர்வு; பணிக்கு திரும்பும் மக்கள் இடம்: தாம்பரம் வீடியோ:அசோக்குமார் தே

Posted by Vikatan EMagazine on Sunday, May 10, 2020

சென்னை தாம்பரம் பகுதியில், அனுமதி வழங்கப்பட்ட மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்காகப் பயணம் மேற்கொண்டனர். வீடியோ: தே. அசோக்குமார்

11 May 2020 7 AM

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஊரடங்கை முடிவுக்குக்கொண்டுவருவது மற்றும் மே 17-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

முந்தைய 4 ஆலோசனைக் கூட்டங்களைப் போலல்லாமல், இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால், இந்தக் கூட்டம் பல மணிநேரம் நீடிக்கலாம் என்று தெரிகிறது. கூட்டத்தில், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ஊரடங்கு இருக்கு... ஆனா இல்ல... மூன்றாம் கட்ட ஊரடங்கு.... #LockDown #Version3.0
அடுத்த கட்டுரைக்கு