Published:Updated:

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு - முழு தகவல்கள் #NowAtVikatan

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

11-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 May 2021 8 PM

முதலமைச்சரின்   பொது   நிவாரண   நிதி விவரங்கள்

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள பொதுமக்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதியுதவி வழங்கிடுவீர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் நிவாரண நிதியின் வங்கிக் கணக்கு தகவல் கீழே

முதலமைச்சர் நிவாரண நிதி
முதலமைச்சர் நிவாரண நிதி
11 May 2021 8 PM

தொழில்துறைக்கு    அரசு   சலுகை   அறிவிப்பு

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் மானியங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த விவரங்கள் கீழே

11 May 2021 6 PM

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு:

முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் - உள்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

உமாநாத் ஐ.ஏ.எஸ் - நிதி, உணவு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

சண்முகம் ஐ.ஏ.எஸ் - முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வருவாய், சட்டம், வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ் - சமூக நலம்,கால்நடை , சுற்றுலா, விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், MSME உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

11 May 2021 6 PM

7     பேர்   விடுதலை   ஸ்டாலின்   ஆலோசனை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

முன்னதாக 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் - 7 பேர் விடுதலை
பேரறிவாளன் - 7 பேர் விடுதலை
11 May 2021 12 PM

'தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு!'

அப்பாவு
அப்பாவு

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் கு.பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

11 May 2021 11 AM

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற ஸ்டாலின்!

இன்று காலை 16 -வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்கியது. தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். முதலில் முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏ-வாகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அவை முன்னவரான துரைமுருகன் பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்றுக்கொள்கிறார்கள். நாளை நடைபெறும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்ர் தேர்வுக்கு, சபாநாயகர் பதவிக்கு அப்பாவு எம்.எல்.ஏ-வும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளை இருவரும் போட்டியின்று தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

11 May 2021 11 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,29,942 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,29,92,517 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,876. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,49,992-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,90,27,304-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,15,221பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,56,082 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 17,27,10,066 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

11 May 2021 9 AM

நீலகிரி: `நாளொன்றுக்கு 2,000 நபர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்படும்!’

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "ஒரு நாளைக்கு 2,000 நபர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்படும். குன்னூரிலுள்ள பாஸ்டியர் ஆய்வகத்திலிருந்து புதிதாக இயந்திரம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜனைப் பொறுத்தவரை எந்த பற்றாக்குறையும் இல்லை. தொற்றைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறோம்"என்றார்.

11 May 2021 8 AM

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் இன்று (11-05-2021) நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். தற்காலிக சபாநாயகராகப் பொறுப்பேற்றிருக்கும் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

கலைவாணர் அரங்கம் - சட்டசபை
கலைவாணர் அரங்கம் - சட்டசபை

இதற்காக அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை (12-05-2021) சபாநாயகர், மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு