Published:Updated:

சாத்தான்குளம்: `ஜெயராஜ் வீட்டில் 4.30 மணி நேர விசாரணை!’ - அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யும் சிபிஐ #NowAtVikatan

ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சி.பி.ஐ
ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சி.பி.ஐ

11.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Jul 2020 5 PM

தமிழக அமைச்சரவைக் கூட்டம்:

தலைமைச் செயலகத்தில் வரும் 14ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்கிறார்கள்.

11 Jul 2020 5 PM

கல்லூரி இறுதியாண்டு தேர்வு: முதல்வர் கடிதம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். மேலும் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

11 Jul 2020 4 PM

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு!

சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்
சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்

சாத்தான்குளம் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த நிலையில், முதற்கட்டமாக வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் குழுவினர் சாத்தான்குளத்திலுள்ள ஜெயராஜின் வீட்டில் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் குழுவினர், ஜெயராஜின் இல்லத்தில் சுமார் 4.30 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு தற்போது சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம்: முதல் தகவல் அறிக்கை; முக்கிய தடயங்கள்!   - வேகமெடுத்த சிபிஐ விசாரணை
11 Jul 2020 11 AM

சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் குழு இன்று காலை விசாரணையைத் தொடங்கியது. முன்னதாக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த நிலையில், முதற்கட்டமாக வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் குழுவினர் சாத்தான்குளத்திலுள்ள ஜெயராஜின் வீட்டில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறது.

சாத்தான்குளம்: வியாபாரிகள் மரணம் முதல் சி.பி.ஐ விசாரணை வரை! - வழக்கு கடந்துவந்த பாதை
அடுத்த கட்டுரைக்கு