Published:Updated:

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி... 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும்! - தேர்தல் ஆணையம் #NowAtVikatan

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

11-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

11 Sep 2020 7 PM

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி! - தேர்தல் ஆணையம் அதிரடி

 தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் குறித்த கூடுதல் விவரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, வேட்பாளர்களின் குற்றபின்னணி குறித்தவிவரங்களை அந்தந்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சிகள் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!

11 Sep 2020 1 PM

மதிப்பெண்தான் அறிவை அளவீடு செய்வதற்கான அளவுகோலா?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று புதிய கல்விக் கொள்கை குறித்துப் பேசினார். அப்போது அவர், ``மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்” என்றவர், தொடர்ந்து, ``பெற்றோர்கள் பிள்ளைகளோடு உரையாடும்போது, `நீ என்ன கற்றாய்?’ என்று கேட்பதில்லை... அதற்கு மாறாக, `எத்தனை மதிப்பெண்கள் பெற்றாய்?’ என்றுதான் கேட்கிறார்கள். தேர்வுகளும், மதிப்பெண்களும்தான் ஒரு மாணவனுடைய அறிவை அளவீடு செய்வதற்கான அளவுகோலா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அடுத்த கட்டுரைக்கு