Published:Updated:

சட்டப்பேரவை தேர்தல்: தி.மு.க-வில் 8 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அமைப்பு! #NowAtVikatan

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

11-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

11 Oct 2020 2 PM

தி.மு.க-வில் 8 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க, தி.மு.க-வில் 8 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேரா அ.ராமசாமி ஆகியோர் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பிடித்துள்ளனர். இந்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

11 Oct 2020 11 AM

இந்தியாவில் 70 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 74,383 பேர் புதிதாக கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 70,53,807 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 918 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,334 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 60,77,977 பேர் குணமடைந்துள்ளனர். 8,67,496 பேர் மருத்துவமனைகளில் அல்லது ஹோம் க்வாரண்டைனில் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு