‘இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது’ - இந்த ‘பராசக்தி’ பட வசனத்துக்குப் பொருத்தமான வழக்கு இது. ரயில் இருக்கையில் யார் அமர்வது என்கிற சின்ன பிரச்னையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை, கைதுசெய்யப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்து 24 ஆண்டுகளாகத் தலைமறைவு, பறிமுதல் செய்யப்பட்டதில் சில தோட்டாக்கள் மாயம்... இப்படி, பல விசித்திரங்களைக்கொண்டது இந்த வழக்கு!

6.7.1996-ல் சென்னையிலிருந்து புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ், திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் - கடம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங் களுக்கிடையே சென்றுகொண்டிருந்த போது, துப்பாக்கிச் சத்தம் கேட்டு பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ராஜா, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்தார். அவரின் எதிரில், சி.ஆர்.பி.எஃப் (மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை) காவலர் அதுல் சந்திர தாஸ், துப்பாக்கியோடு நின்றிருந்தார். இருக்கையில் அமர்வதில் ஏற்பட்ட பிரச்னையில் பயணியை சி.ஆர்.பி.எஃப் காவலர் சுட்டுக் கொன்றதாக அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜாவின் சடலத்தை மீட்ட ரயில்வே போலீஸார், அதுல் சந்திர தாஸ் மீது கொலை வழக்கு பதிவுசெய்து சிறையிலடைத்தார்கள். அவரிடமும் மற்ற சி.ஆர்.பி.எஃப் காவலர்களிடமும் இருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைத் தடய அறிவியல் ஆய்வுக்காக போலீஸார் பறிமுதல் செய்தார்கள்.

திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கைதான சில மாதங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்த அதுல் சந்திர தாஸ் தலைமறைவானார். அதன் பிறகு வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

சி.ஆர்.பி.எஃப் காவலர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏழு துப்பாக்கிகள், 499 தோட்டாக்கள், துப்பாக்கி முன்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஏழு கத்திகள் ஆகியவற்றைத் திரும்ப ஒப்படைக்கும்படி, 2018-ல் திருவள்ளூர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் என்.ரமேஷ் மனுத்தாக்கல் செய்தார். துப்பாக்கிகள், தோட்டாக்களை ஒப்படைக்க போலீஸ் தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இருந்தும், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதுதான், பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்களில் சில மாயமாகியிருந்ததும், அதனால்தான் கீழ்கோர்ட்டில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் மட்டுமல்லாமல், வேறு சில குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருள்களும் மாயமான தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. அது தொடர்பாக, தமிழகக் காவல்துறையிடம் நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரிக்க உத்தரவிட்டபோதுதான், அதுல் சந்திர தாஸ் வழக்கில் தோட்டாக்கள் மாயமானது குறித்து 2009-ம் ஆண்டே திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நீதிமன்றப் பாதுகாப்பு அறையின் ஊழியர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டு, வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட விவரங்களும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன. இந்த வழக்கில், நீதிமன்ற ஊழியர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்துவருகிறது.

தோட்டாக்கள் மாயமான விவகாரத்தில், கொரோனா காலகட்டத்தில் நடந்த ஆன்லைன் வீடியோ கான்ஃபரன்ஸ் நீதிமன்ற விசாரணையின்போது, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி, மாஜிஸ்ட்ரேட், தமிழக டி.ஜி.பி திரிபாதி முதல் சம்பந்தப்பட்ட அனைத்துக் காவல்துறை அதிகாரிகளும் உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் ஆஜராகினர். அப்போது, ‘24 ஆண்டுகளாக ஏன் குற்றவாளியைக் கைதுசெய்யவில்லை’ என நீதிபதி கேட்டதுடன், சி.ஆர்.பி.எஃப் மற்றும் தமிழகக் காவல்துறையினர் இணைந்து காவலர் அதுல் சந்திர தாஸைக் கைதுசெய்யும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சைபர் க்ரைம் உதவியோடு அதுல் சந்திர தாஸ் பதுங்கியிருக்கும் இடத்தை போலீஸார் நெருங்கினர். 24 ஆண்டுகளுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான அதுல், மேகாலயா பல்கலைக்கழகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்த அதுலை, 2.12.2020-ல் உள்ளூர் மக்களின் எதிர்ப்புக்கிடையில் பிடித்து, சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 19.1.2021-ல் நடைபெறவிருக்கிறது. அப்போது என்னென்ன தகவல்கள் வெளியாகப்போகின்றனவோ தெரியவில்லை!

இது குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் என்.ரமேஷிடம் பேசினோம். ‘‘கடந்த 1996-ல் நடந்த கொலை வழக்கில், சி.ஆர்.பி.எஃப் காவலர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்களைத் திரும்ப ஒப்படைக்க மனுத்தாக்கல் செய்தபோதுதான் சில தோட்டாக்கள் மாயமான தகவல் வெளியில் தெரிந்தது. இந்த வழக்கைப்போல, 2009-ம் ஆண்டுக்கு முன்பு வரை பதிவான குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 112 பொருள்கள் மாயமாகியிருந்தன. அது தொடர்பாக விசாரணை நடத்தி 33 பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள 79 பொருள் களைக் காணவில்லை. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் பொருள்களைப் பாதுகாக்க வேண்டிய ஊழியர்களின் தவறு, வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படாத வகையில், என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை மாவட்ட நீதிபதியுடன் இணைந்து நானும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறேன்’’ என்றார்.

‘‘மாயமான 112 வழக்கு பொருள்களில் முக்கிய ஆவணங்களும் இருந்திருக்குமோ... அவை இல்லாததால் எத்தனை குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தப்பியிருப்பார்களோ?’’ என்ற சந்தேகத்தை நீதிபதி பி.என்.பிரகாஷ் எழுப்பியிருக்கிறார். ஒரு நீதிமன்றத்தில் மட்டும் 112 பொருள்கள் மாயமாகியிருக்கின்றன என்றால், மற்ற நீதிமன்றங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!