Published:Updated:

கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன்!- கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

கே.சி. பழனிசாமி
கே.சி. பழனிசாமி

11.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

11 Feb 2020 8 PM

கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன்!

கட்சியை விட்டு நீக்கியப் பிறகும், அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியது, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியது மற்றும் அ.திமு.க பெயரில் போலி இணையதளம் தொடங்கி ஆள்களை தேர்ந்தெடுத்தார் என்று சூலூர், முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் சூலூர் அளித்த புகாரின் அடைப்படையில் அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் 11 பிரிவுகளின் கீழ் கே.சி. பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜாமீன் கோரிய பழனிசாமி மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூலூர் காவல்நிலையத்தில் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றுக் கூறி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

11 Feb 2020 3 PM

ஒயிட் வாஸ் செய்த நியூஸி!

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி 3-3 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இன்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 296 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 112 ரன்கள் விளாசி அணியின் ரன் உயர்வுக்கு காரணமாக இருந்தவர். பங்கஜ் 40 ரன்னும், ஐயர் 62 ரன்னும் பாண்டே 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் அடித்த சதம் வீணாகி போனது. நிக்கோல்ஸ் 80 ரன்னும் குப்தில் 66 ரன்னும் கிராண்ட்கோம் 58 ரன்னும் அடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு