Published:Updated:

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்..!- தலைவர் ரேஸில் முந்திய அ.தி.மு.க; பின்தங்கிய தி.மு.க #NowAtVikatan

11.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

ஸ்டாலின் - எடப்பாடி
ஸ்டாலின் - எடப்பாடி
11 Jan 2020 4 PM

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்..!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்..!- தலைவர் ரேஸில் முந்திய அ.தி.மு.க; பின்தங்கிய தி.மு.க #NowAtVikatan

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க 14 இடங்களிலும், தி.மு.க 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க 150 இடங்களிலும் , தி.மு.க 135 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.ம.மு.க இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது. சில இடங்களில் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் முடிவுகள் வெளியாகவில்லை. மேலூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க 6 ஒன்றியத்திலும், தி.மு.க 4 ஒன்றியத்திலும், அ.ம.மு.க ஒரு ஒன்றியத்தையும் கைப்பற்றி உள்ளது. இதில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கபட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட கவுன்சிலர்களில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு ஆதரவுக் கட்சியும் 8 - 8 என்ற சமநிலையில் இருப்பதால் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இந்நிலையில் தற்போது தேதி குறிப்பிடமால் இந்த மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

11 Jan 2020 4 PM

கோவில்பட்டி யூனியன் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்..!- தலைவர் ரேஸில் முந்திய அ.தி.மு.க; பின்தங்கிய தி.மு.க #NowAtVikatan

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் ஜெயசீலன் பிற்பகல் 1 மணி வரை தேர்தல் நடைபெறும் அலுவலகத்துக்குள் செல்லவில்லை. இந்நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில், மாற்று தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரியிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிற்பகல் 3 மணி வரை மாற்று அலுவலர் நியமிக்கப்படவில்லை. மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலன், கோட்டாட்ச்சியர் விஜயா ஆகியோர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் தேர்தல் அதிகாரியை நியமித்த பிறகே தேர்தல் நடைபெறும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோவில்பட்டி யூனியன் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 Jan 2020 1 PM

`மோதிய தி.மு.க வேட்பாளர்கள்!'

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 22 வார்டுகளில் தி.மு.க உறுப்பினர்கள் 12 வார்டுகளில் வெற்றி பெற்றனர். மெஜாரிட்டி இருந்தும் தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் ஆகியோருக்கு இடையேயான கோஷ்டி பூசலில், இரண்டு அணியாகப் பிரிந்தது.

ரமேஷ்
ரமேஷ்

இதில், அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவு வேட்பாளரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகையாவின் உறவினர் ரமேஷ், கீதாஜீவன் ஆதரவு வேட்பாளர் காசி விஸ்வநாதன் இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில், இருவருமே 11 ஓட்டுகள் பெற்று சமநிலை வகித்தனர். இந்நிலையில், குலுக்கலில் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் ரமேஷ் யூனியன் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

- இ.கார்த்திகேயன்

படம் : ப.கதிரவன்

11 Jan 2020 2 PM

கன்னியாகுமரி மாவட்ட நிலவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்.

1) கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 ம்வார்டு கிறிஸ்டல் ரமணிபாய் போட்டியின்றித் தேர்வு.

2) ராஜகமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அ.தி.மு.கவைச் சேர்ந்த 3ம் வார்டு ஐயப்பன் வெற்றி.

3) தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவராக அ.தி.மு.க சாந்தினி போட்டியின்றித் தேர்வு.

4) தக்கலை ஊராட்சி ஒன்றியத் தலைவராக காங்கிரஸ் கட்சி குலுக்கல் முறையில் அருள் ஆன்றனி தேர்வு.

5) அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அ.தி.மு.கவைச் சேர்ந்த அழகேசன் வெற்றி.

6) முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத் தலைவராக பா.ஜ.கவின் ராஜேஸ்வரி வெற்றி.

7) மேல்புறம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் ஞானசவுந்தரி வெற்றி.

8) குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றியத் தலைவராக பா.ஜ.கவின் அனுஷியா தேவி (1வது வார்டு கவுன்சிலர்) வெற்றி.

9) திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவராக தி.மு.க வேட்பாளர் 5வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் வெற்றி. தி.மு.க மாவட்டச் செயலாளர் மனோதங்கராஜின் ஆதரவாளர் தி.மு.க‌ பிரேமசுதா இவருக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார் ஜெகநாதன் தே.மு.தி.க மாவட்டச் செயலாளராக இருந்து சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தம் உள்ள 9 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களில்

அ.தி.மு.க- 3

பி.ஜே.பி.- 2

காங்கிரஸ்-3

தி.மு.க- 1 (போட்டி வேட்பாளர்)

கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக அ.தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த மெர்லியன் தாஸ் வெற்றி.

மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 11 சீட்டுகள்.

அதிமுக கூட்டணி - 6

திமுக கூட்டணி - 5

- ஆர்.சிந்து

11 Jan 2020 2 PM

திருச்சியை முழுமையாகக் கைப்பற்றிய தி.மு.க!

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க அனைத்திலும் வெற்றிபெற்றது.

- சி.ய.ஆனந்தகுமார் & தே.தீட்ஷித்

11 Jan 2020 2 PM

திருவாரூர் மாவட்ட நிலவரம்!

திருவாரூரில் முழுமையாக நிறைவடைந்தது மறைமுக தேர்தல். மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றிய நிலையில், ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க 5 இடங்களிலும், தி.மு.க 5 இடங்களிலும் வெற்றிபெற்றன.

- எம்.ராகவன்

11 Jan 2020 1 PM

அருப்புக்கோட்டை அருகே டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி ஒன்றியத்தில் தலைவர் தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்தலில் இரண்டு தரப்பும் சமமான வாக்குகள் பெற்றதால், யார் வெற்றி பெற்றார் என்பதை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

டி.எஸ்.பி வெங்கடேசன்
டி.எஸ்.பி வெங்கடேசன்

அதனால் அங்கிருந்த இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத் தடுத்த டி.எஸ்.பி வெங்கடேசனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இப்போது மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் 2 பேரைக் கைது செய்தனர். மேலும், இருவரைத் தேடி வருகின்றனர்.

- செ.சல்மான்

படம்: ஆர்.எம்.முத்துராஜ்

11 Jan 2020 1 PM

தஞ்சாவூர் நிலவரம்

தஞ்சாவூர் -14 ஒன்றியங்கள்

1.தஞ்சாவூர் ஒன்றியம் - வைஜெயந்தி மாலா (தி.மு.க)

2.ஒரத்தநாடு ஒன்றியம் - பார்வதி (தி.மு.க) குலுக்கல் முறையில் வெற்றி

3.அம்மாபேட்டை ஒன்றியம் - கலைச் செல்வன் ( தி.மு.க )

4.பட்டுக்கோட்டை ஒன்றியம் - பழனிவேல் (தி.மு.க)

5.மதுக்கூர் ஒன்றியம்- அ.தி.மு.கவைச் சேர்ந்த அமுதா போட்டியின்றித் தேர்வு

6.திருவோணம் ஒன்றியம் - செல்லம் (தி.மு.க)

7.பேராவூரணி ஒன்றியம் - ஒத்திவைப்பு

08.சேதுபாவசத்திரம் ஒன்றியம் - முத்துமாணிக்கம் (தி.மு.க)

09.பூதலூர் ஒன்றியம் - அரங்கநாதன் (தி.மு.க)

10.திருவையாறு ஒன்றியம் - அரசபாகரன் (தி.மு.க)

11.பாபநாசம் ஒன்றியம் - சுமதி (தி.மு.க)

12.கும்பகோணம் ஒன்றியம் - காயத்ரி (தி.மு.க)

13.திருவிடைமருதூர் ஒன்றியம் - சுபா (தி.மு.க)

14.திருப்பனந்தாள் ஒன்றியம் - தேவி ரவிசந்திரன்

- கே.குணசீலன்

11 Jan 2020 12 PM

தேர்தலில் முறைகேடு?

மேலூர் ஒன்றியத் தலைவராக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் தம்பி பொன்னுச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக வந்த தகவலுக்கு அ.ம.மு.க, தி.மு.கவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 13 பேர் தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளநிலையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தேர்தல் நடைபெறும் அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

- செ.சல்மான்

11 Jan 2020 12 PM

குலுக்கலில் காங்கிரஸ் வெற்றி!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் போட்டிக்கு காங்கிரஸ் சார்பில் அருள் ஆன்றணியும், பி.ஜே.பி. சார்பில் மனோகரகுமாரும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 10 ஓட்டுகளில் இருவருக்கும் தலா 5 ஓட்டுகள் கிடைத்தன. இதையடுத்து குலுக்கல் முறையில் காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆன்றணி வெற்றிபெற்றார்.

- ஆர்.சிந்து

11 Jan 2020 12 PM

கடலூர் மாவட்ட நிலவரம்

கடலூர் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களில் அ.தி.மு.க 7 இடங்களையும், பா.ம.க மற்றும் தி.மு.க தலா ஒரு இடத்தையும் பெற்றிருக்கின்றன. நல்லூர் ஒன்றியத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படிருக்கிறது.

- ஜெ.முருகன்

11 Jan 2020 12 PM

கோவை மாவட்ட நிலவரம்!

கோவை மாவட்ட ஒன்றியக்குழு தலைவர்கள் - 12 ஒன்றியங்கள்

1. பெரியநாயக்கன்பாளையம் - 9வது வார்டில் வெற்றிப்பெற்ற நர்மதா போட்டியின்றி தேர்வு

2. காரமடை - 7வது வார்டில் வெற்றிப்பெற்ற மணிமேகலை போட்டியின்றி தேர்வு

3. அன்னூர் - 1வது வார்டில் வெற்றிப்பெற்ற அம்பாள் பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு

4. சூலூர் - 8வது வார்டில் வெற்றிப்பெற்ற பாலசுந்தரம் 8 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்

5. ஆனைமலை - 2வது வார்டில் வெற்றிப்பெற்ற சாந்தி 9 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்

6. சுல்தான்பேட்டை- 7வது வார்டில் வெற்றிப்பெற்ற இரத்தினம் 7 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்

7. பொள்ளாச்சி வடக்கு - 10வது வார்டில் வெற்றிப்பெற்ற விஜயராணி போட்டியின்றி தேர்வு

சாந்திமதி
சாந்திமதி

8. கிணத்துக்கடவு - 6வது வார்டில் வெற்றிப்பெற்ற நாகராணி போட்டியின்றி தேர்வு

9. தொண்டாமுத்தூர் - 1வது வார்டில் வெற்றிப்பெற்ற மதுமதி விஜயகுமார் போட்டியின்றி தேர்வு

10. எஸ்.எஸ்.குளம் - 5வது வார்டில் வெற்றிப்பெற்ற கவிதா 3 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்

11. மதுக்கரை - 1வது வார்டில் வெற்றிப்பெற்ற உதயகுமாரி போட்டியின்றி தேர்வு

சூலூர், ஆனைமலை, எஸ்.எஸ்.குளம் ஆகிய 3 ஒன்றியங்களில் போட்டி நடைபெற்று வாக்குகள் வித்யாசத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மற்ற 11 ஒன்றியங்களிலும் அதிமுக உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.

இதைத்தவிர, கோவை மாவட்ட தலைவராக சுலூர் ஒன்றியத்தில் இருந்து சாந்திமதி போட்டியின்றி தேர்வு,

17 பதவிகளில், ஒரு வேட்பு மனு மட்டுமே பெறப்பட்டது. மறைமுக தேர்தலில் பொள்ளாச்சி 13வது வார்டு ராதாவேணி மட்டும் பங்கேற்கவில்லை.

மாவட்ட துணை தலைவர் பதவிக்கான தேர்தல் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும்.

- இரா.குருபிரசாத்

11 Jan 2020 12 PM

கோவில்பட்டியில் தாமதமான தேர்தல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் ஜெயசீலன் பிற்பகல் 12.30 மணி வரை தேர்தல் நடைபெறும் அலுவலகத்துக்குள் செல்லவில்லை. அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவில்பட்டி
கோவில்பட்டி

இந்நிலையில், மாற்று தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரியிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலன், கோட்டாட்சியர் விஜயா ஆகியோர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆட்சியர் தேர்தல் அதிகாரியை நியமித்த பிறகே தேர்தல் நடைபெறும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- இ.கார்த்திகேயன்

11 Jan 2020 12 PM

10 ஒன்றியங்களில் தி.மு.க போட்டியின்றித் தேர்வு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் ஒன்றிய சேர்மன் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். லால்குடி மற்றும் துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே கடுமையாக போட்டி போடுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- சி.ய.ஆனந்தகுமார்

11 Jan 2020 12 PM

கீரப்பாளையத்தில் பா.ம.க வெற்றி!

கனிமொழி
கனிமொழி

கடலூர் கீரப்பாளையம் ஒன்றியத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வேட்பாளர் கனிமொழி 9 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்த ஒன்றியம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஒன்றியம் என்பது குறிப்பிடதக்கது.

- ஜெ.முருகன்

படம்: எஸ்.தேவராஜன்

11 Jan 2020 12 PM

ஒன்றியத் தலைவர் தேர்தலில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர்!

விஜயராணி
விஜயராணி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊரட்சி ஒன்றிய குழுத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், காங்கிரஸ் கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் குமார் என்பவரின் மனைவி.

- கா.முரளி

11 Jan 2020 12 PM

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகப் போராட்டம்!

தி.மு.கவினர் மறியல்
தி.மு.கவினர் மறியல்

மண்டபம் ஒன்றியத் தலைவர் தேர்தல் நடைபெறும் யூனியன் அலுவலகத்தினுள் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வாகனம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைக் வெளியேற்றக்கோரி தி.மு.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

- இரா.மோகன்

படம்: உ. பாண்டி

11 Jan 2020 12 PM

தேனி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக ப்ரீத்தா தேர்வு!

ப்ரீத்தா
ப்ரீத்தா

தேனி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக அ.தி.மு.கவைச் சேர்ந்த போடி 1வது வார்டு மாவட்டக் கவுன்சிலர் ப்ரீத்தா தேர்வு.

- எம்.கணேஷ்

11 Jan 2020 12 PM

தேர்தல் ஒத்திவைப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மறைமுக தேர்தலில் வாக்களிப்பதற்கு 6 தி.மு.க உறுப்பினர்கள், ஒரு அ.தி.மு.க உறுப்பினர் மட்டும் வந்துள்ளனர். மற்ற உறுப்பினர்கள் இதுவரை வரவில்லை. இதனால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

- கே.குணசீலன்

11 Jan 2020 12 PM

திருபுவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

தேர்தல் ஒத்திவைப்பு
தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

- அருண் சின்னதுரை

11 Jan 2020 12 PM

கயத்தார் யூனியன் சேர்மனாக அ.ம.மு.கவின் மாணிக்கராஜா தேர்வு!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் 10 வார்டுகளில் அ.ம.மு.க வெற்றி பெற்றது. சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒரு உறுப்பினரும் அ.ம.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

மாணிக்க ராஜா
மாணிக்க ராஜா

இந்நிலையில், அ.ம.மு.கவின் தென்மண்டலச் செயலாளர் மாணிக்கராஜா கயத்தார் ஒன்றியப் பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த யூனியன் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் சொந்த ஊர் அடங்கிய யூனியன். அமைச்சரின் சொந்த வார்டிலும் அ.ம.மு.கவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- இ.கார்த்திகேயன்

படம்: ப.கதிரவன்

11 Jan 2020 12 PM

முகாசிப்பிடாரியூர் சலசலப்பு!

முகாசிப்பிடாரியூர்
முகாசிப்பிடாரியூர்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், முகாசிப்பிடாரியூர் ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க தரப்பினர் 9 வார்டுகளைப் பிடித்தனர். இந்த 9 பேரும் கடந்த இரண்டு நாள்களாக ஒரே இடத்தில் ரகசியமாகத் தங்கியிருந்தனர். 9 பேர் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியாமல் குழப்பிப்போன அ.தி.மு.கவினர், `9 பேரையும் யாரோ கடத்திவிட்டார்கள்’ என ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் முகாசிபிடாரியூர் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர். பிரச்னை சுமுகமாகி ஊராட்சி மன்ற துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

- நவீன் இளங்கோவன்

படம்: க.தனசேகரன்

11 Jan 2020 11 AM

நிர்பயா வழக்கு ! - குற்றவாளிகளின் ஜாமீன் மனு 14-ம் தேதி விசாரணை!

நிர்பயா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை வழங்க உத்தவிட்டுள்ளது பாட்டியாலா நீதிமன்றம். முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நான்கு பேரையும் வரும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்குத் தூக்கிலிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

இதையடுத்து குற்றவாளிகளில் அக்‌ஷய் குமார் என்பவர் ஜாமீன் கேட்டும், வினய் சர்மா என்பவர் தூக்குத் தண்டனையை மறு சீராய்வு செய்யுமாறும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 14-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, ரோஹிண்டன், பானுமதி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

11 Jan 2020 9 AM

மறைமுகத் தேர்தலுக்குத் தயாராகும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்!

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சித் துணை தலைவர்களைத் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதன்மூலம் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள், 9,624 ஊராட்சித் தலைவர்கள், 76,746 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றிபெற்றவர்கள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றனர்.

உற்சாகத்தில் தி.மு.க... உணர்ந்துகொண்ட அ.தி.மு.க- உள்ளாட்சித் தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?

இந்தநிலையில், 27 மாவட்டங்களில் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களை இன்று நடைபெறும் மறைமுகத் தேர்தல் வாயிலாக மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்ய இருக்கிறார்கள். மேலும், 314 ஒன்றியத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், 9,624 ஊராட்சித் துணைத் தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், ஊராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் காலை 11 மணிக்கும் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகியவை பிற்பகல் 3 மணிக்கும் நடைபெற இருக்கிறது.