Published:Updated:

`தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு’ - மாநில சுகாதாரத்துறை #NowAtVikatan

கொரோனா
கொரோனா

12.6.2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

12 Jun 2020 6 PM

தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

`தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு’ -  மாநில சுகாதாரத்துறை #NowAtVikatan

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக பதிவாகியுள்ளது. மேலும் மாநிலத்தில் 1,342 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமானோர் எண்ணிக்கை 22,047 ஆக உள்ளது.

மேலும், ஒரே நாளில் தமிழகத்தில் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.90% ஆக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,231 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு 28,924 ஆக அதிகரித்துள்ளது.

12 Jun 2020 3 PM

சென்னை மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை மருத்துவக் கல்லூரி
சென்னை மருத்துவக் கல்லூரி

சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 42 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

12 Jun 2020 11 AM

சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் திடீர் இடமாற்றம்!

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் ஏற்கெனவே இருந்துவந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

12 Jun 2020 10 AM

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி!

மேட்டூர் அணை
மேட்டூர் அணை
எம்.விஜயகுமார்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 11 ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 90 நாள்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். நீர் திறப்பால் 5,22,400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணையின் உபரிநீரைக் கொண்டு ஜனவரி மாதத்துக்குள் சேலத்தில் 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை என்று முதல்வர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
எம்.விஜயகுமார்

மேலும் அவர் பேசுகையில், ``மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை. முழு ஊரடங்கை அமல்படுத்த எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை’’ என்றும் அவர் .

12 Jun 2020 9 AM

இந்தியாவில் முதல்முறையாக 10,000-த்தைத் தாண்டிய தினசரி பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,579-இலிருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 10,956 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,102 -இலிருந்து 8498ஆக அதிகரித்திருக்கிறது.

Corona
Corona

அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 147195 ஆகவும் உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் 1,41,842 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 75,95,646ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 38,41,331 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,23,811ஆக உயர்ந்துள்ளது.

`மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு பாதிப்பு... தன்னால் குணமாகியிருக்கலாம்!'- ஐசிஎம்ஆர் #Corona
அடுத்த கட்டுரைக்கு