Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 4,000-த்தைக் கடந்த எண்ணிக்கை! சென்னையில் 1,168 பேருக்கு பாதிப்பு

Corona
Corona

12.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Jul 2020 6 PM

கொரோனா: வருவாய் ஆய்வாளர் மரணம்! - மூடப்பட்ட ஆவடி மாநகராட்சி அலுவலகம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா நோய்த் தடுப்பு பணியில் மூன்று மாதங்களாக முனைப்புடன் செயலாற்றி வந்த ஆவடி மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களிலேயே உயிரிழந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

corona
corona

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நோய்த்தடுப்பு பணியின்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதரின் உடல்நிலை மோசமானதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிரமான மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை ஆய்வாளர் ஸ்ரீதர் சிகிச்சைச் பலனின்றி உயிரிழந்தார்.

வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் உயிரிழந்ததை அடுத்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூன்று நாள்களுக்கு மூடப்பட்டது. அங்கு, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- சே.பாலாஜி

12 Jul 2020 6 PM

தமிழகத்தில் 4,000-த்தைக் கடந்த எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.

corona virus
corona virus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,617 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,532 ஆக உயர்ந்தது. கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 68 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: `எம்.பி-க்களுக்கு அழைப்பு; சமூக இடைவெளி!’ - மழைக்காலக் கூட்டத் தொடர் எப்போது?
12 Jul 2020 6 PM

சென்னையில் மேலும் 1,168 பேருக்குத் தொற்று!

corona virus
corona virus

சென்னையில் மட்டும் இன்று 1,168 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.

12 Jul 2020 3 PM

ஐஷ்வர்யா ராய், அவர் மகளுக்கும் கொரோனா தொற்று!

அமிதாப் பச்சன் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஐஷ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவர் மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் பச்சன்

அதேநேரம், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டில் மாநகாரட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Corona Live Updates: தமிழகத்தில் 4,000-த்தைக் கடந்த எண்ணிக்கை! சென்னையில் 1,168 பேருக்கு பாதிப்பு

அதேபோல், அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா நந்தாவும் இவர்களுடனே தங்கியிருந்தார். அவருக்கும் அவர் குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களுக்குத் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

12 Jul 2020 11 AM

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகியிருக்கிறது. மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்றவைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

முழு ஊரடங்கு - சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்: படங்கள் - ராகேஷ்

முழு ஊரடங்கு - நாகர்கோவிலில் வெறிச்சோடிய சாலைகள்: படங்கள் - ரா.ராம்குமார்

12 Jul 2020 10 AM

அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், அவரின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சானுக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அமிதாப், அபிஷேக் பச்சான்
அமிதாப், அபிஷேக் பச்சான்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தன்னுடன் கடந்த 10 நாள்களில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டுவதாகப் பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சான் ஆகியோர் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளில் மும்பை மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

12 Jul 2020 10 AM

இந்தியாவில் 8.5 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 551 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,674 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,621 ஆகவும் உயர்ந்துள்ளது.

12 Jul 2020 10 AM
காற்று மூலம் கொரோனா பரவுமா? ஆய்வுகள் சொல்வதென்ன?

கொரோனா - உலக நிலவரம்!

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து
Pixabay

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,28,42,036 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 74,78,180 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,67,649 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு