Published:Updated:

Corona Virus: தமிழகத்தில் 3.14 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,871 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

corona virus
corona virus

12.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,633 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 2,56,313 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 119 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து
Pixabay

சென்னையில் மேலும் 993 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 993 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யா: `உலகின் முதல் கொரோனா தடுப்பூசி’ - சொந்த மகளுக்குச் சோதனை செய்து வெளியிட்ட புதின்!
12 Aug 2020 10 AM

இந்தியாவில் 23 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,29,639 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 834 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,091 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,39,600 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு