Published:Updated:

`குஷ்பு விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை!’ - கே.எஸ்.அழகிரி #NowAtVikatan

குஷ்பு
குஷ்பு

12-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

12 Oct 2020 12 PM

கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று!

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கே.பாலகிருஷ்ணன் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Vikatan
12 Oct 2020 12 PM

குஷ்பு விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை!

`குஷ்பு விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்புவை, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அந்தக் கட்சி இன்று காலை அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு எழுதிய கடிதம் வெளியானது.

குஷ்பு
குஷ்பு

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, `குஷ்பு காங்கிரஸிலிருந்து விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை. குஷ்புவை பா.ஜ.க-வினர் யாரும் அழைக்கவில்லை. அவரேதான் பா.ஜ.க-வுக்குச் செல்கிறார். குஷ்பு, கட்சியிலிருந்தபோதும் கொள்கைப்பிடிப்புடன் செயல்படவில்லை’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

12 Oct 2020 10 AM

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!

`மத்திய அரசுக்கு தன்னிச்சையாகக் கடிதம் எழுதியிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து, மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் - ஆளுநர் - துணைவேந்தர் ரகசியக் கூட்டணியா?’’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

துணைவேந்தர் சூரப்பா
துணைவேந்தர் சூரப்பா

மேலும், ``இட ஒதுக்கீட்டுக்கும், மாநில நிதி உரிமைக்கும் விரோதமாக, மத்திய அரசுக்கு தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

’`ஆன்லைன்’ வார்த்தை எங்கே?!’ - மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்
12 Oct 2020 10 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியா - கொரோனா
இந்தியா - கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,20,539-ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 66,732 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 816 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியிருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,150-ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 61,49,535 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

கொரோனா: உயிரிழந்த 200 பேரின் இறுதிப் பயணம்; உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - தொற்றால் உயிரிழந்த சோகம்
அடுத்த கட்டுரைக்கு