Published:Updated:

முதல்வரை விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது வழக்கு! #NowAtVikatan

ஆ.ராசா
ஆ.ராசா

12-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

12 Dec 2020 1 PM

ஆ.ராசா மீது வழக்கு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக விமர்சித்த புகாரில் தி.மு.க எம்.பி-யும், துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆ.ராசா
ஆ.ராசா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது முதல்வரை அவதூறாக ஆ.ராசா விமர்சித்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம்: ஆ.ராசா கொடும்பாவி எரிப்பு - தி.மு.க - அ.தி.மு.க தொண்டர்கள் மோதல்!
12 Dec 2020 1 PM

`மரியாதை நிமித்தமான சந்திப்பு!’ - நாராயணசாமி

`நிர்வாகரீதியாக இருக்கக்கூடிய பிரச்னைகளை மனக்கசப்பாகப் பார்க்கக் கூடாது' என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

நாராயணசாமி - ஸ்டாலின்
நாராயணசாமி - ஸ்டாலின்

புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பாக பிரச்னை இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை நாராயணசாமி இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி: `திருமாவளவனின் முழுப் பேச்சையும் கேட்க வேண்டும்!’ - முதல்வர் நாராயணசாமி
அடுத்த கட்டுரைக்கு