Published:Updated:

கைதுசெய்யப்படும் தலைவர்கள்... என்ன நடக்கிறது பரந்தூரில்?

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

அறவழியில் போராடும் மக்களைச் சந்திக்கச் செல்வதையே குற்றமாகக் கருதி காவல்துறை கைதுசெய்வது, ஜனநாயகத் தின் குரல்வளையையே நெரிக்கும் செயல்.

கைதுசெய்யப்படும் தலைவர்கள்... என்ன நடக்கிறது பரந்தூரில்?

அறவழியில் போராடும் மக்களைச் சந்திக்கச் செல்வதையே குற்றமாகக் கருதி காவல்துறை கைதுசெய்வது, ஜனநாயகத் தின் குரல்வளையையே நெரிக்கும் செயல்.

Published:Updated:
போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக பரந்தூரைச் சுற்றியுள்ள 12 கிராம மக்கள், `வேண்டாம் விமான நிலையம், காப்போம் விவசாய நிலம்’ என்ற கோஷத்துடன் 50 நாள்களுக்கும் மேலாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், பரந்தூர், ஏகனாபுரம் கிராமங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புறக் காவல் நிலையங்களை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காவல்துறை, போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் செல்லும் அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினரைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து வருகிறது. காவல்துறையின் இந்தப் போக்கு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, பரந்தூர் கிராம மக்களைச் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் பழனியப்பன், பேராசிரியர் குணசேகரன் தர்மராஜா ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்படும் தலைவர்கள்... என்ன நடக்கிறது பரந்தூரில்?

இதேபோல ஆகஸ்ட் 30-ம் தேதி, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மக்களைச் சந்திக்கச் சென்ற மாநிலச் செயலாளர் கரீம், நிர்வாகிகள் அன்சாரி, ஜாஃபர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை, பாதி வழியிலேயே கைதுசெய்த போலீஸார் அவர்களை சுங்குவார்சத்திரத்திலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியனை நீர்வள்ளூர் பகுதியிலேயே தடுத்து கைதுசெய்தனர். செப்டம்பர் 17-ம் தேதி ஏகனாபுரத்தில் நடந்த உண்ணாவிரதத்துக்கு மக்களின் அழைப்பின்பேரில் கலந்துகொள்ளச் சென்றபோது, செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு சுங்கச்சாவடியில் பி.ஆர்.பாண்டியன் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது, ``அறவழியில் போராடும் மக்களைச் சந்திக்கச் செல்வதையே குற்றமாகக் கருதி காவல்துறை கைதுசெய்வது, ஜனநாயகத் தின் குரல்வளையையே நெரிக்கும் செயல். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிராக முதல் ஆளாகக் குரல்கொடுத்தது தி.மு.க-தான். இன்றைக்கு அதே தி.மு.க., காவல்துறையை வைத்து மக்களையும் விவசாயிகளையும் ஒடுக்கி, அச்சுறுத்தி பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முயல்கிறது. போராடும் மக்களையும் கிராமத்திலேயே சிறை வைத்திருக் கிறது. இவையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரிந்துதான் நடக்கின்றனவா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

அதேபோல, ``அமைதியான வழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு உரிமையுள்ள நிலையில் அவர்களை அடக்குவது, போராட்டங்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயக விரோதமான செயல்” என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

என்னவானாலும் பரந்தூர் விமான நிலையத்தை எதிர்க்கும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக கிராம மக்களும் அறிவித்திருக்கிறார்கள். போலீஸை மட்டும் நம்பாமல், இந்தப் பிரச்னையில் முதலமைச்சரே நேரடியாகத் தலையிட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை!