‘‘வீட்டுல கழிப்பறை இல்லாததால பொம்பளப் புள்ளைங்க காட்டுப்பக்கம் போய் ஒதுங்கிட்டுவர்றது எவ்ளோ அவஸ்தை தெரியுமா... எங்க ஊருல எங்க பாட்டிங்க, அம்மாங்க, நாங்க எல்லாரும் இத்தனை வருஷமா அந்த அவஸ்தையைதான் அனுபவிச்சிட்டு வந்தோம். ஆனா, இப்போ எங்க கிராமத்துல 125 வீடுகளுக்குக் கழிவறைகள் கிடைச்சிருக்கு. இது எங்களுக்கு எவ்ளோ பெரிய விடுதலை, பாதுகாப்பு, நிம்மதினு சொல்லத் தெரியலை’’ - பரவசத்துடன் பேசுகிறார், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஜெயலெட்சுமி. புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் இருக்கும் தன் ஆதனக்கோட்டை கிராமத்துக்கு 125 கழிப்பறைகள் கிடைக்கக் காரணமானவர்.

முந்திரிக்காடுகளுக்கு நடுவே கிடக்கிறது ஆதனக்கோட்டை கிராமம். அங்கு பெரும்பாலானவர்களுக்கு, முந்திரிக்கொட்டை களை வறுத்தெடுத்து அதிலிருந்து பருப்பைப் பிரித்தெடுப்பதுதான் தொழில். பெரும்பாலும் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளுமே. திறந்தவெளிதான் இதுவரை அம்மக்களின் கழிப்பறை. இப்போது அவர்களின் குடிசை களுக்கு அருகே எழும்பியிருக்கின்றன குளியலையறையுடன் கூடிய கழிப்பறைகள். சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த இந்த கிராமம், இப்போது முன்மாதிரி கிராமமாக மாறியிருக்கிறது. ‘`எல்லாம் எங்க ஊருப்புள்ள ஜெயலெட்சுமியாலதான்’' என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

அப்படி என்ன செய்தார் ஜெயலட்சுமி?

“நான் அரசுப் பள்ளியில ப்ளஸ் டூ படிக்கிறேன். போன வருஷம், தனியார் நிறுவனம் ஒண்ணு நடத்துன விண் அறிவியல் போட்டியில வெற்றி பெற்று, அமெரிக்காவின் ‘நாசா’வுக்குச் செல்ல நாடு முழுவதும் தேர்ந் தெடுக்கப்பட்ட 4,000 மாணவர்கள்ல நானும் ஒருத்தி. என்றாலும், எங்க குடும்பம் இருந்த ஏழ்மை நிலையில அதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க போறது? என்னோட நிலைமை தெரிஞ்சு, மாவட்ட நிர்வாகத்துல ஆரம்பிச்சு தொண்டு நிறுவனங்கள்வரை பலரும் அதுக்காக எனக்கு உதவினாங்க.

அந்த நேரத்துலதான், ‘கிராமாலயா’ என்ற தொண்டு நிறுவனத்துல இருந்தும், ‘உங்களுக்கு என்ன உதவி தேவை சொல்லுங்க’னு கேட்டாங்க. ‘பலரும் உதவினதால அமெரிக்கா போக எனக்குத் தேவையான உதவிகள் எல்லாம் கிடைச்சிடுச்சு’னு சொன்னேன். ‘சரி வேற ஏதாச்சும் தேவையிருக்கா?’னு கேட்டாங்க. அந்த நிமிஷம், எங்க கிராமத்துல பொண்ணுங்க எல்லாரும் கழிப்பறை வசதி இல்லாம காட்டுக்குப் போற அவஸ்தைங்கதான் ஞாபகம் வந்துச்சு. அதை சொல்லி, ‘அதுக்கு உங்களால எதுவும் உதவ முடியுமா?’னு கேட்டேன். தொண்டு நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி தாமோதரன் சார், ‘சரி, கழிவறைகள் கட்டிக்கொடுத்துடலாம்’னு சொன்னார்.

அடுத்தடுத்த நாள்கள்ல, தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கீதா மேம், பார்வதி மேம், முரளிதரன் சார், இளங்கோ சார்னு எங்க ஊருக்கு வந்து உடனே சர்வே எடுத்தாங்க. கிராமத்துல கழிவறையில்லாத வீடுகளைக் கணக்கெடுத்தாங்க. சிமென்ட், செங்கல்னு பொருள்கள் வந்து இறங்கிச்சு, சுவர் எழும்புச்சு. கொஞ்ச நாள்ல எங்க ஊருல 125 கழிப்பறை களைக் கட்டிக்கொடுத்துட்டாங்க. எனக்கு மட்டுமல்ல, எங்க கிராமத்துக்கே இன்னும் ஆச்சர்யம் விலகல. இப்போ, ‘கிராமாலயா’வுல நானும் ஒரு மெம்பரா இருக்கேன்’’ - புத்துணர் வுடன் சொல்லிமுடித்தார் ஜெயலெட்சுமி.

கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள், ‘`நான் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து 25 வருஷம் ஆகப்போகுது. கொஞ்ச தூரத்துல தெரியுற காடுதான் எங்களுக்குக் கழிப்பறை. எனக்கு மூணு பொம்பளப் புள்ளைங்க. அதுகளுக்கு பாத்ரூம் கட்டித்தரலாம்னு நெனச்சாலும், கூலி வேலையில கிடைக்குற காசு வயித்துக்கும் வாய்க்குமே சரியாபோச்சு. என்னத்த நாம பாத்ரூம் கட்டினு மனசும் விட்டுப்போச்சு. நெனச்சே பாக்கல... இன்னிக்கு எங்களுக்குக் குளியலறையோட சேர்ந்த கழிப்பறையைக் கட்டிக்கொடுத்திருக்காங்க.

‘பேஸ்மென்ட்டு மட்டும் நீங்க செலவழிச்சு போட்டுக்கொடுங்க, அப்புறம் நாங்க பாத்துக்கு றோம்’னு சொன்னாங்க. அதுக்கு நாங்க 5,000-க்குள்ள செலவழிச்சோம்... 20,000 ரூபாய் செலவுல மளமளனு பாத்ரூமை கட்டிக்கொடுத்துட்டாங்க. தெனமும் காட்டுக்குப் போயிட்டு வரவே எங்களுக்கு நேரமாகும். இப்போ அந்த நேரமெல்லாம் மிச்சமாகி கூடுதலா உழைச்சு சம்பாதிக்க முடியுது’’ என்றார் நன்றியுடன்.

பள்ளி மாணவி ஈஸ்வரி, ‘`காட்டுக்குப் போற வழியில டாஸ்மாக் கடை ஒண்ணு இருக்கு. கால நேரத்துல அந்தப் பக்கம் ஆம்பளைங்க கூடிருவாங்கங்கிறதால, நிம்மதியா காட்டுக்குப் போகக்கூட முடியாது. பெரியவங்க எல்லாரும் கருக்கல்லேயே காட்டுக்குப் போயிட்டு வந்துடுவாங்க. எங்களை மாதிரி சின்ன பொண்ணுங்க எழுந்திரிக்கிறதுக்குள்ள சில நேரங்கள்ல விடுஞ்சிடும். அப்புறம் போகும்போது அந்தப் பக்கம் ஆம்பளைங்களப் பார்த்தா பாதி வழியிலேயே திரும்பிவந்துடுவோம். அன்னிக்கு நாள் முழுசும் வயித்துவலி கொலையா கொல்லும். தாத்தா, பாட்டிங்ககிட்ட இதையெல்லாம் சொன்னா, ‘நாங்கயெல்லாம் அந்தக் காலத்துல’னு ஆரம்பிச்சிடுவாங்க. இப்போ எங்களுக்கெல்லாம் ஜெயலெட்சுமியால பாத்ரூம் கிடைச்சிருச்சு. வயித்து வலியே வர்றதில்ல’’ - ஈஸ்வரியின் சிரிப்பில் பல தலைமுறைப் பெண்களின் இருள் நீங்கிய வெளிச்சம்.

‘`கிராமத்துல 125 வீடுகள்ல 118 வீடுகளுக்குக் கழிப்பறைகளை ஒப்படைச்சுட்டாங்க சார். இன்னும் ஏழு கழிப்பறைகள் வேலை மட்டும் நடந்துக்கிட்டு இருக்கு’’ என்று ஜெயலெட்சுமி அந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு நிற்க, அவரின் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் தம்பி கோவிந்தராஜு நம்மிடம், ‘`எங்க அப்பா இறந்துட்டாரு. அம்மா அழகுவள்ளிக்கு உடம்பு சரியில்ல. சித்தப்பா கண்ணன், சித்தி ஈஸ்வரி பராமரிப்புலதான் நாங்க இருக்கோம். இப்படி ஒரு குடும்ப சூழ்நிலையிலயிருந்தும் எங்கக்கா சுயம்பா எந்திரிச்சு வந்து இதெல்லாம் செஞ்சிக்கிட்டிருக்கு. ரொம்ப பெருமையா இருக்கு’’ என்றான்.

தன் கிராமம் முழுவதற்கும் கழிப்பறைகளைப் பரிசளித்திருக்கும் ஜெயலெட்சுமியின் முகத்தில் அப்பியிருந்தது வறுமை. ‘அதெல்லாம் பாத்துக்கலாம்’ என்ற மன உறுதியுடன் நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த இளம் சிட்டு.

அடுத்த வருஷம் ‘நாசா’வுக்குப் போறேன்!

‘‘கடந்த மே மாதம் ‘நாசா’வுக்குப் போக வேண்டிய திட்டம், கொரோனாவால கேன்சல் ஆகிடுச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு கடிதம் வந்துச்சு. ‘நாசா செல்லும் பயணத்தை ரத்து செய்து, பணத்தை திருப்பி வாங்கிறீங்களா, இல்ல அடுத்த வருஷம் போறீங்களா’னு கேட்டாங்க. பணத்தைவிட கனவுதானே பெருசு... என்னோட நாசா கனவுதானே இத்தனை பேரை எனக்கு உதவவெச்சு, கிராமத்துக்குக் கழிப்பறைகள்வரை கட்டிக்கொடுத்திருக்கு... அதனால, அடுத்த வருஷம் போறதா சொல்லிட்டேன்’’ - கனவு ஈடேற காத்திருக்கிறார் ஜெயலெட்சுமி.

கழிப்பறைகளை மக்களை பயன்படுத்த வைக்கணும்!

“நாங்க 33 வருஷமா குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காகச் செயல்பட்டுட்டு இருக்கோம். அதுக்கான நிதி உதவியை, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR - Corporate Social Reponsibility) நிதி மூலமா பெறுகிறோம். அப்படி, பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனம் தங்களோட சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ஒதுக்கியிருக்கிற 2.5 கோடி ரூபாய் நிதியில், மிகவும் பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இருக்கும் 7 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, ஒன்றரை கோடி செலவில் 750 கழிப்பறைகளைக் கட்டிக்கொடுக்கத் திட்டமிட்டோம். ஒரு கழிப்பறைக்கு ரூ.20,000 நிதி ஒதுக்கப்படும். கூடவே, குடிநீர், தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் உள்ளிட்ட சுகாதாரக் கல்வி குறித்த பயிற்சி, விழிப்புணர்வை தொடர்ந்து அளிப்பதும் இலக்கு'' என்கிறார் ‘கிராமாலயா’ தலைமை செயல் அதிகாரி தாமோதரன்.

மேலும், ``ஜெயலெட்சுமியை, அவர் ‘நாசா’ போக உதவத்தான் தொடர்பு கொண்டோம். நாசாவுக்கு போகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற மாணவி வீட்டுல கழிப்பறைகூட இல்லைங்கிறது எங்களுக்கு அதிர்ச்சியா, வருத்தமா இருந்தது. அவர் கழிப்பறை கோரிக்கை வைக்க, எங்க புராஜெக்ட்ல அவங்க கிராமத்தையும் சேர்த்துக்கிட்டோம். கழிப்பறைகளை எவ்வளவு நேர்த்தியாகக் கட்டிக்கொடுத்தாலும், மக்களை அதை உபயோகப்படுத்த வைக்கணும். முழுக்க இலவசம்னா மக்களுக்கு அதன்மேல் பற்று வராமல் போகலாம் என்பதாலதான், கழிப்பறையில் அவங்களோட பங்களிப்பும் இருக்கணும்னு அடித்தளத்தை அவங்களைக் கட்டிக்கொடுக்கச் சொல்றோம். இந்த ஊர்ப் பொண்ணுங்களுக்கு எல்லாம் இப்போ ரொம்ப நிம்மதி’’ என்கிறார்.