Published:Updated:

`குற்றால அருவியில் ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தினால் நடவடிக்கை’ - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பி.ஆண்டனிராஜ்

தற்போது, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவதால், அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

`குற்றால அருவியில் ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தினால் நடவடிக்கை’ -  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
`குற்றால அருவியில் ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தினால் நடவடிக்கை’ - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

நெல்லை மாவட்டம், குற்றாலம் அருவிப் பகுதிகளில் எண்ணெய், சோப்பு, ஷாம்பு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

`குற்றால அருவியில் ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தினால் நடவடிக்கை’ -  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளநிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றும் அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்து பார்வையிட்டார். பொதுமக்களின் தேவைக்காக பழைய குற்றாலம், புலியருவி பகுதிகளில் தொட்டிமூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுத்தார். 

அத்துடன், ஐந்தருவி மற்றும் மெயினருவி பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட உத்தரவிட்டார். அப்பகுதியில், பொது இடங்களில் உள்ள மின் விளக்குகள் அனைத்தையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், ``தற்போது குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவதால், அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அருவிகளுக்குச் செல்லும் சாலைகளைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவில் குளிக்க, பொதுமக்களின் வசதிக்காக அருவிப் பகுதி, உடை மாற்றும் பகுதி, கழிப்பிடப் பகுதிகளில் உள்ள மின் விளக்குகளின் பழுதுகளை உடனடியாகச் சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

குற்றால அருவிக்கு வரும் வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிபெற்றுள்ள கடைகள், அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே வைக்க வேண்டும். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவுப் பணியாளர்கள் தேவையான அளவு நியமிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரம் பேணப்படும். 

`குற்றால அருவியில் ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தினால் நடவடிக்கை’ -  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

குற்றால அருவிகளில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தவும், சோப்பு, எண்ணெய், ஷாம்பு, சீயக்காய் போன்ற பொருள்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை விநியோகம் செய்யும் கடைகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் துணிப்பைகள், காகிதப் பைகளையே பயன்படுத்த வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.