Published:Updated:

காவிரி மேலாண்மை வாரியம்:பிரதமருக்கு ஜெயலலிதா மீ்ண்டும் கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம்:பிரதமருக்கு ஜெயலலிதா மீ்ண்டும் கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம்:பிரதமருக்கு ஜெயலலிதா மீ்ண்டும் கடிதம்
காவிரி மேலாண்மை வாரியம்:பிரதமருக்கு ஜெயலலிதா மீ்ண்டும் கடிதம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதி நினைவூட்டியுள்ளார்.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை அடுத்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

இதனிடையே, தஞ்சாவூரில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க தாமதமானால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

##~~##
மேலும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் ஆணைய இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் விட நடவடிக்கை தேவை என்றும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.