Published:Updated:

`கிராண்ட் மாஸ்டர் கிளப் உங்களை வரவேற்கிறது' - சிறுவன் பிரக்ஞானந்தா குறித்து நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த்!

`கிராண்ட் மாஸ்டர் கிளப் உங்களை வரவேற்கிறது' - சிறுவன் பிரக்ஞானந்தா குறித்து நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த்!
News

உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள, சென்னை சிறுவனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவருக்கு `கிராண்ட் மாஸ்டர் கிளப் உங்களை வரவேற்கிறது' என்றுகூறி வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த். 

இத்தாலியில் நடத்துவரும் கிரெடின் ஓபன் சர்வதேச சதுரங்கப் போடியில், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக உலக சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த, பிரக்ஞானந்தா என்ற 12 வயது சிறுவன். இதன்மூலம் சர்வதேசப் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்குமுன், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜே கர்ஜாகின் என்பவர், உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் சாதனையை தனது 12 வயதில் படைத்தார். அவரைத் தொடர்ந்து, உலகின்  இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளார் பிரக்ஞானந்தா. மேலும், இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் தனதாக்கி உள்ளார்.

இதையடுத்து, கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அவரின் பதிவில், ``கிராண்ட்மாஸ்டர் கிளப் உங்களை வரவேற்கிறது. வாழ்த்துகள் பிரக்ஞானந்தா. விரைவில் சென்னையில் நாம் சந்திக்கலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz