Published:Updated:

`சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர்; அவரைத் தவறாகப் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது!’ - கோகுல இந்திரா #NowAtVikatan

சசிகலா
சசிகலா

13-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Jan 2021 11 AM

`சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர்’ - கோகுல இந்திரா

கோகுல இந்திரா
கோகுல இந்திரா

தேர்தல் பரப்புரையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து, அவதூறாகப் பேசிவருவதாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சசிகலா குறித்தும், முதல்வர் குறித்தும் உதயநிதி பேசியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அ.தி.மு.க தலைவராக இருந்தவர் சசிகலா. அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர். ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. சசிகலாவைத் தவறாகப் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றவர், உதயநிதிக்கு எதிராக போராட்டம் நடததும்படி முதல்வரும், துணை முதல்வரும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

13 Jan 2021 10 AM

கொரோனா தடுப்பூசி: மது அருந்தக் கூடாது! 

புனேவிலிருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து நேற்று தமிழகம் வந்தது. மத்திய தொகுப்பிலிருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி
தடுப்பூசி

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு மது அருந்தக் கூடாது. இரண்டாம் டோஸ் போடும் வரையில் 28 நாள்களுக்கு மது அருந்தியிருக்கக் கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாள்களுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்” என்றார். மேலும், கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு