Published:Updated:

சாத்தூரைத் தொடர்ந்து சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! #NowAtVikatan

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து

13-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Feb 2021 11 AM

மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து!

சாத்தூர் விபத்து
சாத்தூர் விபத்து

சாத்தூரில் நேற்று பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 19 பேர் உயிரிழந்த நிலையில், இன்று சிவகாசி அருகிலுள்ள காக்கிவாடன்பட்டியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து நடந்திருக்கிறது. ஆலையில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சிவகாசியிலிருந்து காக்கிவாடன்பட்டிக்கு விரைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, அந்தப் பகுதிக்கு யாரும் செல்லாத வண்ணம் மக்களே தடுத்து நிறுத்துகிறார்கள்.

13 Feb 2021 11 AM

நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

நிவர் புயல்
நிவர் புயல்

தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய ஐந்து மாநிலங்களுக்குக் கூடுதல் வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,113 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதில் தமிழகத்துக்கு நிவர் மற்றும் புரெவி புயல் நிவாரணத்துக்குக் கூடுதலாக ரூ.286.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நிவர் புயல் நிவாரணமாக ரூ.63.14 கோடி, புரெவி புயல் நிவாரணமாக ரூ.223.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

13 Feb 2021 11 AM

முதல்வர் தொடங்கிவைத்த திட்டங்கள்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னை தலைமைச் செயலகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். பயிர்க் கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளிடம் வழங்கி, திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர். மேலும், தமிழக அரசின் உதவியைப் பெற 1100 சேவை எண் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். அனைத்துக் குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு