Published:Updated:

`தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா!' -பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக அதிகரிப்பு #NowAtVikatan

பீலா ராஜேஷ்
Live Update
பீலா ராஜேஷ்

13-04-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Apr 2020 6 PM

பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக அதிகரிப்பு!

கொரோனா குறித்த இன்றைய நிலவரத்தை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். ``தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58 பேர் நம் மாநிலத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீட்டு கண்காணிப்பில் 33,850 பேரும் அரசு முகாமிலும் 130-க்கு அதிகமானவர்களும் இருக்கிறார்கள். 63,380 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது." எனக் கூறியுள்ளார்.

13 Apr 2020 4 PM

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ``ஏற்கனவே பிரதமர் மோடியிடம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தனது கருத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், வல்லுநர்கள் ஆலோசனையின்படியும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் இந்த ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. கொரோனா நோயை தடுக்கும் நோக்கில் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.

மே மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும். அதேபோல் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்" என்று எடப்பாடி அறிவித்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
13 Apr 2020 2 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாளை காலை மோடி நாட்டு மக்களுக்கு உரை!

கொரோனா தடுப்பு விவகாரத்தில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளை முடிவுக்கு வர உள்ளது. ஒரு சில மாநிலங்கள் இந்த ஊரடங்கை தங்களது மாநிலங்களில் இம்மாத இறுதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தன. தமிழகத்தை பொறுத்தவரை, பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சரவை கூடி முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் நாளை காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த உரையின் போது நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பான தகவல்களை அவர் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

13 Apr 2020 1 PM

டிஎன்பிஎஸ்சி தலைவராக  கா. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்!

வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தொடர்பாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தை அதிரவைக்கும் அளவுக்கு டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

13 Apr 2020 12 PM

9,000-த்தைத் தாண்டிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,000-த்தைத் தாண்டியது. அந்த எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல், கொரோனாவால் உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 857 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தநிலையில், ஊரடங்கு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டாவது ஊரடங்கில் தொழிற்சாலைகள் இயங்க கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது உள்ளிட்ட உத்தரவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.