Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு முழு முடக்கம்!’ - முதல்வர் உத்தவ் தாக்கரே #NowAtVikatan

முதல்வர் உத்தவ் தாக்கரே
முதல்வர் உத்தவ் தாக்கரே

13-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Apr 2021 10 PM

மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு முழு முடக்கம்!

இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அம்மாநிலத்தில் நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 15 நாட்களுக்கு அனைத்து அலுவலகங்களும் மூடப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

13 Apr 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,36,89,453 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 879. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,71,058 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,22,53,697 ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 12,64,698 பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 10,85,33,085 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

13 Apr 2021 9 AM

மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Vikatan

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடனான காணொலிக் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் நடத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடிக்கு அது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர், ``உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்த்தில், மேலும் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பயனுள்ளதாக இருக்கும். மேலும், தடுப்பூசி போடுவதற்கான தகுதியையும் வயது மட்டுமன்றி, தேவை, பாதிப்பு நேரிடக்கூடிய அபாயத்தை அடிப்படையாகக்கொண்டு விரிவுபடுத்த வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு