Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 2,000-த்தைக் கடந்த பலி எண்ணிக்கை! புதிதாக 4,328 பேருக்கு பாதிப்பு

corona infection
corona infection

13.7.2020 : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Jul 2020 6 PM

புதிதாக 4,328 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,035 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்தது. கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 66 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

சென்னையில் மேலும் 1,140 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,140 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது. 60,694 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 16,601 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை 1,277 ஆக அதிகரித்துள்ளது.

13 Jul 2020 6 PM

ஜூலை 31-ம் தேதி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது!

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சில தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை
பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை

இந்தநிலையில், ஜூலை 31-ம் தேதி வரை தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஜூலை 31-ம் தேதி வரை இயக்கப்படாது. தமிழக அரசின் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

13 Jul 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா - இந்தியா
கொரோனா - இந்தியா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,53,471 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,01,609 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

13 Jul 2020 9 AM

உலகளவில் கொரோனா:

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,32,918 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 75,79,516 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,71,356 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு