Published:Updated:

105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு!

105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு!

பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுவது குறித்த கட்டுரை...

105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு!

பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படுவது குறித்த கட்டுரை...

Published:Updated:
105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியைத் தாண்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து இன்று (19-ம் தேதி) நீர் திறக்கப்பட இருக்கிறது. 

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அபரிமிதமாகக் கனமழை பொழிந்துவருவதால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பி, முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அங்கு வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்க, அங்குள்ள அணைகளிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல், காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்துவருகிறது. கடந்த  8-ம் தேதி அணையின் நீரின் அளவு 63,680 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீரின் அளவு 105 அடி  இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காகக் காவிரி ஆற்றில் 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. 

இதையடுத்து, ``காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காவிரி டெல்டா விவசாயத்துக்காக இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்துவைக்க இருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism