Published:Updated:

மேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்! #MetturDam

மேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்! #MetturDam

மேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்! #MetturDam

மேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்! #MetturDam

மேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்! #MetturDam

Published:Updated:
மேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்! #MetturDam

மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கும் மேல் நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் டெல்டா மாவட்டப் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவைத்தார்.

தமிழகத்தின் வளத்தையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கும் நதிகளில் முக்கியப் பங்கு வகிப்பது காவிரி ஆறு. நீண்ட காலமாக கர்நாடகாவிலிருந்து இந்த நதி நீரைப் பெறுவதில் தமிழக அரசு மிகப் பெரிய சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது இயற்கை அன்னையின் மழைக் கொடையால், கர்நாடகாவில் கனமழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் வெள்ளப் பெருக்கெடுத்து தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணையை நிரப்பி தமிழக மக்களின் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

தற்போது, தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவிலும், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பிவிட்டன. எனவே, உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையினாலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால் மேட்டூர் அணை  விரைவாக நிரம்பி வருகிறது. செவ்வாய் கிழமை இரவு 9:00 மணிக்கு 100 அடியை எட்டியதையடுத்து பொதுப்பணித்துறையின் நீர் நிலை ஆதாரத் துறையின் செயற்பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் மதுசூதனன், மேட்டூர் தாசில்தார் அறிவுடை நம்பி ஆகியோர் 16 கண் பாலம் வழியாக அணைக்குள் இறங்கி தண்ணீரைத் தொட்டு வணங்கி மலர் தூவி வரவேற்றனர். தேங்காய், பழம், பூசணிக்காய் உடைத்து வழிபாடும் செய்தனர்.

மேட்டூர் அணை :

காவிரி ஆறு கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் உருவாகி, தமிழ் நாட்டில் பூம்புகார் என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த நதியின் குறுக்கே தமிழகத்தில் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆங்கிலேயர்கள் 1925 இல் தொடங்கி 1934 ம் ஆண்டு ஸ்டேன்லி நீர்த்தேக்கத்தை (மேட்டூர் அணை) வெறும் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடித்தார்கள். இந்த அணை கட்டப்பட்ட தருணத்தில், இதுதான் உலகத்திலேயே உயரமான நேர்க்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகத் திகழ்ந்தது. 

ஸ்டேன்லி நீர்த்தேக்கத்தின் மொத்த நீளம் 5,300 அடி மற்றும் ஆற்றின் படுகை மட்டத்திலிருந்து 176 அடி உயரம் கொண்டதாகும். கீழ்மட்ட மதகின் அடிமட்டத்திலிருந்து 120 அடி உயரம் கொண்டதாகும். ஸ்டேன்லி நீர்த்தேக்கத்தில் உபயோகப்படுத்தும் நீரின் கொள்ளளவு 93.470 டி.எம்.சி., முழுக் கொள்ளளவு 95.660 டி.எம்.சி. ஆகும்.

ஸ்டேன்லி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டு 84 ஆண்டுகளில் 38 முறை முழுக் கொள்ளளவையும், நேற்றோடு 64 முறையாக 100 அடியையும் எட்டியிருக்கிறது. சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஸ்டேன்லி நீர்த்தேக்கத்திலிருந்து ஏற்படும் கசிவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட இதுநாள் வரை குறைந்த அளவிலேயே உள்ளது. இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிகப் பெரிய அணையாக ஸ்டேன்லி நீர்த்தேக்கம் உள்ளது.

பாசனம் மற்றும் குடிநீர் :

மேட்டூர் ஸ்டேன்லி நீர்த்தேக்கத்தின் மூலம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 12 டெல்டா மாவட்டங்களில் நேரடி மற்றும் மறைமுகமாக 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், வேலூர், சென்னை, நாகப்பட்டினம் உட்பட 26 மாவட்டங்களுக்கும் மேல் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் அணையின் நீர் இருப்பினைப் பொறுத்து பாசனத்துக்கு ஜூன் 12 ம் தேதி முதல் ஜனவரி 28 ம் தேதி வரை அணையின் மேற்குக் கரை வாய்க்கால் மூலம்  தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், சமீப காலமாக நீர்ப் பங்கீட்டின்படி கர்நாடகா, தண்ணீர் விடாததாலும் பருவ மழை பொய்த்துப் போவதாலும் தண்ணீர் திறக்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறந்திருக்க வேண்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. தற்போது குறுவை அறுவடை செய்யும் தருணத்தில் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிக அதிகமாக இருப்பதால், நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிட இருக்கிறார். இந்த நீர் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

தயார் நிலையில் பொதுப்பணித்துறை :

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதாலும், இன்று தமிழக முதல்வர் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதாலும் அணையின் பாதுகாப்பு, பராமரிப்புப் பணியைப் பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அணை மராமத்துப் பணிக்காக நிரந்தர ஊழியர்கள் 50 பேரும், தற்காலிக ஊழியர்கள் 60 பேரும் இருக்கிறார்கள். அணைக்குத் தண்ணீர் வந்தாலும், வரவில்லை என்றாலும் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர அணை மராமத்துப் பணிகள் செய்வது வழக்கம்.

தண்ணீர் வருவதற்கு முன்பாகவே ஷட்டர்களை ஆய்வு செய்து கிரீஸ் போட்டிருக்கிறோம். பாசனக் கால்வாய் பகுதிகளையும் பார்வையிட்டுத் தூர் வாரியிருக்கிறோம். இன்று முதல்வர் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்ததையொட்டி கரையோரத்தில் உள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை செய்திருக்கிறோம். கர்நாடகாவிலிருந்து எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதைச் சேமித்து வெளியேற்றும் அளவுக்குத் தயார் நிலையில் இருக்கிறோம். இந்திய வானிலை ஆராய்ச்சி அறிக்கையின்படி இன்னும் 10 நாள்களுக்குக் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை இருப்பதால், நீரின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது வருவதைப் போலவே அணைக்குத் தண்ணீர் வந்து கொண்டிருந்தால், இன்னும் ஐந்து நாள்களுக்குள் அணை முழுக் கொள்ளளவை எட்டி விடும். அணை முழுக் கொள்ளளவைத் தாண்டியதும் முதற்கட்டமாக 16 கண் பாலம் வழியாக உபரி நீர் 25,000 கனஅடி நீரும், பவர்ஹவுஸ் வழியாக 25,000 கன அடி நீரும் வெளியேற்றுவோம்.  

அணை கட்டப்பட்ட நாளிலிருந்து 38 முறை முழுமையாக நிறைந்திருக்கிறது. 64 முறை 100 அடியைத் தாண்டியிருக்கிறது. இறுதியாக கடந்த 8.8.2014 அன்று 100 அடியைத் தாண்டியது. அதன் பிறகு தற்போது 100 அடியைத் தாண்டியிருக்கிறது. இன்று காலை, முதல்வர் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்தார். முதல்வர் திறக்கும்போது குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீரின் அளவு அதிகரித்து இரவு நேரத்திலிருந்து நீர் அதிகமாகத் திறந்து விடப்படும்'' என்றார்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism