Published:Updated:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரது பெயர்கள் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளன. 

விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயலாற்றும் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், விளையாட்டுத் துறையில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு ஆகியோரது பெயர்கள் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை விருதுக் குழுவில் இடம்பெற்றுள்ள சிலர் உறுதிசெய்துள்ளனர்.

விருதுக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அவர்கள் இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும். குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது பெறுவார்கள். 

அவ்வாறு விருது பெறும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சச்சின் மற்றும் தோனி ஆகியோருக்குப் பின்னர், இந்த விருதைப் பெறும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி தனதாக்கிக்கொள்வார். சச்சின் டெண்டுல்கர், கடந்த   1997-ம் ஆண்டும், எம்.எஸ். தோனி கடந்த 2007-ம் ஆண்டும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றிருந்தனர். இந்த விருதுக்கு விராட் கோலியின் பெயரை கடந்த 3 ஆண்டுகளாகப் பரிந்துரைசெய்துவருகிறது. பளு தூக்கும் போட்டியில், கடந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மீராபாய் சானுவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்திய மீராபாய் சானு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தியாவின் தங்க மங்கை என்ற பெருமையைப் பெற்றார்.