Published:Updated:

`எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொள்கிறோம்!' - ஹிமாதாஸூக்கு வேலை வழங்கிய நிறுவனம்

`எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொள்கிறோம்!' - ஹிமாதாஸூக்கு வேலை வழங்கிய நிறுவனம்
`எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொள்கிறோம்!' - ஹிமாதாஸூக்கு வேலை வழங்கிய நிறுவனம்

தடகள வீராங்கனை ஹிமாதஸூக்கு இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் வேலை வழங்கி கௌரவித்துள்ளது.


ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2வெள்ளிப்பதக்கங்களை  வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் ஹிமா தாஸ். ஜூனியர் உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அசாமைச் சேர்ந்த 18வயதேயான ஹிமாதாஸூக்கு சமீபத்தில், இந்தாண்டுக்கான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் ஹிமாதாஸூக்கு வேலை வழங்கி கௌரவித்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அதிகாரி(HR) பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.ஓ.சி நிர்வாகம் சார்பில்,  `ஹிமா தாஸை எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இணைத்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

தடகளத்தில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். தேசிய மற்றும் சர்வேதச போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவதற்கான பயணச் செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல,``அடுத்த ஆண்டில் தெற்காசிய விளையாட்டு போட்டி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவை நடக்க இருக்கிறது. அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு தயாராகுவேன்’ என்று ஏற்கெனவே ஹிமாதாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.