Published:Updated:

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்!

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்!

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: சி.ரவிக்குமார்

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்!

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: சி.ரவிக்குமார்

Published:Updated:
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்!

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

ஏரிகளை உருவாக்கியவர்கள் தனிப்பட்ட நபர்களாக இருந்தாலும், அவற்றால் பயனடைந்தவர்கள்தான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

ஏரிகளை நிர்வகித்து வந்தனர். ஆதிக்காலம் தொட்டு ஏரி, நிலங்கள் எல்லாம் பொது உடைமைகளாகத்தான் இருந்தன. அவற்றைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு பாசனம் செய்து வந்தனர். இதற்கு அவர்கள் கடைப்பிடித்தமுறை ‘கரையோலை’ என அழைக்கப்பட்டது. ஓர் ஓலையில் பயிர் செய்வோரின் பெயர்களை எழுதித் தேர்வு செய்து மக்களுக்கு விவசாயம் செய்ய நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அரசுகள் உருவாவதற்குமுன்பே பல ஏரிகள், குளங்கள் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. முதலைக்குளம் கல்வெட்டில் கி.மு 200-மாவது நூற்றாண்டில் ‘வேம்பிற் ஊரார்’ குளம் அமைத்த செய்தியை வரலாற்றாசிரியர் ஐராவதம் மகாதேவன் பதிவு செய்துள்ளார். இந்தக் குளம்தான் தற்போது சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் என்ற கிராமத்தில் உள்ள ஏரி. அரசுகள் உருவான பிறகு, நீர் நிலைகளை உருவாக்குவது ‘ஆள்வோரின் (மன்னர்களின்) தலையாயக் கடமை’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றிப் புறநானூற்றுப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

‘சங்க காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகளை அழித்துப் பெரும்பான்மையான ஏரிகளை மக்கள் உருவாக்கினர்’ என முனைவர் கி.ரா.சங்கரன் தொகுத்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காபோன்ற நாடுகளில் நில உடைமை வேறு, நீர் உரிமை வேறு. நம் நாட்டில் நீர் உரிமையானது நிலத்தோடு சேர்ந்து இருந்ததையும் பல கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு பாசனம் செய்பவர்களுக்குத்தான் முதல் உரிமை. அதனால்தான் கோடைக்காலங்களில் ஏரியிலிருக்கும் மண்ணை எடுத்து விவசாயிகள் கரையில் போட்டுள்ளனர். அதிகமாக இருந்த மண்ணை விவசாய நிலங்களின் வளத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். வேளாண் குடிமக்களின் பங்களிப்போடு ஏரிகளைப் பராமரித்ததால்தான் ‘குடிமராமத்து’ என்ற சொல்லே வந்தது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

பாசனத்துக்கு அடுத்து குடிநீருக்காகவும் ஏரித்தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. முன்முறை, முட்டுமுறை, போகுமுறை போன்ற வார்த்தைகளைக்கொண்டு தண்ணீர் அளந்து கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், நாஞ்சூர் ஏரியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூடத் தண்ணீர்ப் பங்கீடு இருந்ததாக இவ்வூரார் சொல்கின்றனர். தண்ணீர்ப் பங்கீட்டைச் செயல்படுத்துபவர் நீர்க் கட்டி, நீராணிக்கம், கம்புக் கட்டி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஊருக்குப் பொதுவானவர்கள்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

தண்ணீர்ப் பங்கீடு செய்வதில் காட்டிய அதே மேலாண்மையை ஏரிகளின் கட்டுமானங்களைப் பராமரித்தலிலும் காட்டியிருக்கிறார்கள் நம் முன்னோர். ஓர் ஏரியின் நீர்க் கொள்ளளவைக் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான் ஏரி பராமரித்தலில் முக்கியமானது. இதற்காகத் தூர்வாருதல், குழி குத்துதல் என்ற பெயர்களில் வேலை செய்திருக்கின்றனர். படகுகளைப் பயன்படுத்தி ஏரிகளில் படிந்த மண்ணைத் தூர்வாரியிருக்கின்றனர். அன்றைக்கு ஏரிகளின் பரப்பளவும், அதில் தேங்கும் தண்ணீரின் அளவும் அதிகமாக இருந்தது. ஏரியில் தண்ணீர் கொள்ளளவு குறையாமலே, வண்டல் மண்ணை எடுத்து கரையில் போட்டுள்ளனர்.

ஏரியைப் பராமரிப்பதற்கென்று குடிகளிடமிருந்து ஏரி ஆயம், ஏரி ஈவு, ஏரிக்காடி, நிலைக்காசு, ஏரிமுதல், ஏரிப்பட்டி, குளப்பட்டி, ஏரிப்பாய்ச்சல், ஒழுகுநீர்பாட்டம் என்ற பெயர்களில் வரி பெறப்பட்டுள்ளன. ஏரிகளை நிலையாகப் பராமரிப்பதற்காக மானிய நிலங்கள் இருந்தன. அவற்றிலிருந்து வரும் வருமானத்தைக்கொண்டு ஏரிகள் பராமரிக்கப்பட்டன.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

ஏரிகளில் மீன் பிடிப்பதற்கு வரி வாங்கும் வழக்கம் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. ஏரியின் கரையில் உள்ள மரங்கள்மூலம் வரும் வருமானம், வணிகர்கள் தரும் நிதி, சலவைத்தொழில் செய்வோர் தரும் நிதி போன்றவற்றின்மூலம் ஏரியைப் பராமரித்திருக்கின்றனர். ஏரிக்கரைகள் மட்டுமில்லாமல் ஏரியின் மதகுகள் (மடைகள்), கலுங்குகள் போன்ற கட்டுமானங்களைப் பராமரித்தும் புதிதாக உருவாக்கியும் வந்துள்ளனர். இந்த வழக்கங்கள் 1850-ம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கின்றன. ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு ‘பொதுப்பணித்துறை’ உருவாக்கப்பட்டு அதன்கீழ் நீர்நிலைகளின் நிர்வாகம் கொண்டுவரப்பட்டது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

அதில், ஆள்வோர் மட்டுமே அதிகாரம் செலுத்தும் வகையில் சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலத்தில் ஏரிகள் அழிக்கப் படவில்லையென்றாலும், நீர் நிலைகளின்மீது மக்களுக்கிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகும், ஆங்கிலேய சட்டத்திட்டங்களை நீக்கிப் பழைய குடிமராமத்து முறைகளைக் கொண்டு வராதது, தமிழக நீர்நிலைகளின் மீது நிகழ்ந்த மாபெரும் வரலாற்றுப் பிழை. சுதந்திரத்துக்குப் பிறகான காலத்திலிருந்து தற்போது வரை எத்தனை ஏரிகள் காணாமல் போயின என்ற விவரம் இல்லை. பெரும்பான்மையான ஏரிகள் ஆக்கிரமிப்பினாலும், இன்னபிற பயன்பாடுகளினாலும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

பார்க்கர் என்ற ஆங்கிலேயே வரலாற்றாய்வாளர், ‘2,100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் ஏரிகளுக்கு மதகுகள் அமைக்கும்முறை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பாவில் 19-ம் நூற்றாண்டில்தான் அமைக்கப்பட்டது’ என்று குறிப்பிடுகிறார். அப்படியென்றால் நம்முடைய ஏரிகளை எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்திருக்க வேண்டும்?

கடந்த 50 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஏரிகள், கண்மாய்கள் அரசாங்கத்தின் கவனக் குறைவாலும் பொறுப்பின்மையாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நீர்நிலைகள் செல்வாக்குள்ள அரசியல் வாதிகளால் வீட்டுமனைகளாக மாற்றப் பட்டுள்ளன. இதுபோதாதென்று அரசு சார்ந்த உள்ளாட்சி அமைப்புகள் (ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள்) தெரிந்தே கட்டுமான இடிபாடுகள், குப்பைக் கூளங்கள் மற்றும் பிற தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டிப் பல நீர் நிலைகளை மூடிவிட்டன.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்...  கண்டுகொள்ளாத அரசாங்கம்!

இந்தத் தவறுகள் இன்றும் தடையின்றித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றால் இந்நீர்நிலைகளின் வரத்து வாய்க்கால்கள், வெளியேற்று வாய்க்கால்களின் இயற்கை வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆண்டுகளாகவே பெரிய அளவில் ஏரிகள், கண்மாய்கள் பராமரிக்கப் படாததால், ஏரிகள் தூர்ந்து மேடிட்டு நீர்க் கொள்ளளவு குறைந்து வருகிறது.

இதனால்தான் 2015-ம் ஆண்டில் பெருமழைமூலம் கிடைத்த நீரைத் தேக்கி வைக்க முடியாமல் வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டன. மேலும், ஸ்ரீவைகுண்டம், வீராணம், மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி (அடையாறு), பூண்டி நீர்த்தேக்கம் (கொசஸ்தலையாறு, கூவம்) இவற்றின் வழியாக 25 டி.எம்.சி-க்குமேல் வெள்ள நீர் வீணாகக் கடலில் விட நேர்ந்தது. இனிமேலாவது ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகளைப் பாதுகாக்க அரசும் மக்களும் இணைந்த நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

-பாயும்

ஏரியின் வகைகள்

பெரிய ஏரி, குளம்- பாசனப்பயன்பாடு.

ஊரணி, ஊருணி-கிராமக் குடிநீர்த் தேவை.

திருமஞ்சனக்குளம்- இறைவழிப்பாட்டுக்காக இக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோயிலில் இருக்கும் சிலைகளைக் கழுவுவதற்கு நீர் எடுக்க இக்குளங்கள் பயன்பட்டிருக்கின்றன.

தெப்பக்குளம்- கோயில் திருவிழாக்களின் போது பயன்பட்டிருகின்றன.

ஆக்கிரமிப்பிலிருக்கும் ஏரிகள்

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

போரூர், உள்ளகரம், ஆதம்பாக்கம், பீர்க்கன்கரணை, பல்லாவரம் பெரிய ஏரி, அயனம்பாக்கம், கொரட்டூர், கோலடி, செந்நீர்க்குப்பம், பாவேரிப்பட்டு உள்ளிட்ட ஏரிகள்...

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிலையனேரி கண்மாய், ஆணையூர் கண்மாய், ஆ.கொசக்குளம், தத்தனேரிக் கண்மாய், செல்லூர் கண்மாய், முடக்கத்தான் கண்மாய், நாராயணபுரம் கண்மாய், ஆத்திக்குளம், அனுப்பானடி சின்னக் கண்மாய், ஐராவத நல்லூர் கண்மாய், கோச்சடை கண்மாய்.

காணாமல் போன ஏரிகள்:

சென்னை

நுங்கம்பாக்கம் ஏரி    -    வள்ளுவர்கோட்டம்,
மாம்பலம் ஏரி    -    பனகல் மாளிகை, மாம்பலத்தின் சில பகுதிகள்
அல்லிக்குளம் ஏரி    -    நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
கோயம்பேடு சதுப்பு நிலம்    -    பேருந்து நிலையம், மார்க்கெட்
முகப்பேர் ஏரி    -    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு
விருகம்பாக்கம் ஏரி    -    தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு
வேளச்சேரி ஏரி    -    100 அடி சாலை, தமிழ்நாடு அரசு குடியிருப்பு

மதுரை


பீ.பீ.குளம்    -    வருமான வரி, சுங்கத்துறை, அஞ்சல் அலுவலகம்
தல்லாகுளம்    -    மதுரை மாநகராட்சி, வணிகவரி அலுவலகம்,  உலகத் தமிழ்ச் சங்கம், சட்டக் கல்லூரி.
சொக்கிக்குளம்    -    வானொலி நிலையம், அரசு அலுவலர் குடியிருப்பு.
மானகிரி கண்மாய்    -    வக்பு வாரியக் கல்லூரி மற்றும் மாணவர் விடுதி.
வண்டியூர் கண்மாய்    -    மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பூ மார்க்கெட்,  நெல் மார்க்கெட்.
புதூர் கண்மாய்    -    மாவட்ட அலுவலர் குடியிருப்பு
செங்குளம்    -    மாவட்ட நீதிமன்றம்
உலகனேரி கண்மாய்    -    உயர்நீதிமன்றக் கிளை
புதுக்குளம்    -    செய்தியாளர் நகர், அரசுப் போக்குவரத்துப் பணிமனை,
வில்லாபுரம் கண்மாய்    -    வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்
அவனியாபுரம் கண்மாய்    -    திடக் கழிவுகள் கிடங்கு

மாநகரங்களை ஒட்டிய ஏரிகள் மட்டும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், பல நகரங்களில் காணாமல் ஏரிகள் பற்றிய பட்டியல் எடுத்தால், அது இன்னும் நீளும்.

ஏரிப்பாசனத்துக்குப் பயன்படும் மூன்று கால்வாய்கள்:

வரத்துக்கால்வாய் (Supply Channel)
மறுகால்வாய் (Surplus Channel)
கழனிக்கால்வாய் (Distribution Channel)

ஏரிகளைத் திறப்பதற்கான அதிகாரம்!

மழைக்காலங்களில் 60 சதவிகிதத் தண்ணீர், ஓர் ஏரியிலிருந்தாலே தண்ணீரை வெளியேற்றலாம். ஒவ்வோர் ஏரிக்கும் குறிப்பட்ட அளவு கொள்ளளவு ஒன்றை நிர்ணயித்திருப்பார்கள். அந்தக் கட்டத்தைத் தண்ணீர் அடையும்போது, அந்த ஏரி எந்தச் செயற்பொறியாளரின் (பொதுப்பணித்துறை) கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அவரே தண்ணீரைத் திறந்துவிடுவதற்கான முடிவுகளை எடுக்கலாம். ஆங்கிலேயர் காலத்தில் கலெக்டருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டது. அதன்படி கலெக்டருக்குத் தகவல் கொடுத்துவிட்டுத் தண்ணீரைத் திறக்கலாம்.

மழைக்காலங்களில் அந்தந்தப் பகுதிச் செயற்பொறியாளருக்குப் பொதுமக்களே தகவல் கொடுத்து ஆபத்தைத் தவிர்க்கலாம். இதேபோன்று அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்களிலிருந்தும் தண்ணீரைப் பாசனத்திற்குத் திறந்து விடுவதற்கு அந்தந்தப் பொதுப்பணித்துறை பொறியாளருக்கு உரிய அதிகாரம் (Compendium of Water Regulations எனும் வழிகாட்டி நெறிகள்) இன்றும் நடைமுறையில் உள்ளன.

மற்றபடி ஏரியோ, அணையோ பாசன நீர்த்திறப்புக்கு முதல்வர்தான் ஆணையிட வேண்டும்.  முதல்வர்தான் செய்தி அறிக்கை தரவேண்டும் என்று தற்போது மாற்றியுள்ளனர். இதனினும் கொடுமை மாவட்ட ஆட்சியாளர்களுக்குச் செய்தி (தகவல்) தெரிவித்தால் போதும் என்பதை மாற்றி, மாவட்ட ஆட்சியாளர்களின் ஒப்புதலும் பெற வேண்டும் என்று மற்றுமொரு முட்டுக்கட்டை வேறு. இதனால், அணைகள், ஏரிகளில் தண்ணீர் திறப்பதில் ஒரு பொறியாளருக்குப் பல இடையூறுகள் இருந்து வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism