Published:Updated:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்த ராகுல் காந்தி #NowAtVikatan

14-01-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
அவனியாபுரத்தில் ராகுல் காந்தி!
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் கண்டுகளித்தார். அவருடன் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தார்.

இதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குக் காலை 11:30 மணிக்கு வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து அவனியாபுரம் சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டு விளையாட்டை அவர் ரசிக்கவிருக்கிறார்.