Published:Updated:

தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா.. 10 வயதுக்குட்ப்பட்ட 33 பேர் பாதிப்பு! -சுகாதாரத்துறை செயலாளர் தகவல் #NowAtVikatan

கொரோனா
Live Update
கொரோனா

14-04-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

14 Apr 2020 6 PM

10 வயதுக்குட்ப்பட்ட 33 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறித்த இன்றைய நிலவரங்களை சுகாதாரத்துறை பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார். `தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேரில் 21 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1204ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6509 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்துக்கும் அதிகம். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 81 பேர் இதுவரை நம் மாநிலத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் 28711 பேரும் அரசு முகாமில் 135-க்கு அதிகமானவர்களும் இருக்கிறார்கள். 68,519 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் என 33 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

14 Apr 2020 9 AM

24 மணிநேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு பாசிட்டிவ்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10,363 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இதில் 8,988 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 339 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 பேருக்குப் புதிதாக இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு நாள்களில் வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில், பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் இன்று காலை 10 மணிக்கு உரையாற்ற இருக்கிறார். ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS