Published:Updated:

`தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று!’ - சுகாதாரத்துறை #NowAtVikatan

கொரோனா
கொரோனா

14-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

14 Apr 2021 6 PM

தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7,819 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 2,564. தமிழகத்தில் 96,513 நபர்களுக்கு ஒரே நாளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 25 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 9,54,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,87,663 பேர் குணமடைந்துள்ளனர். 12,970 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளனர்.

14 Apr 2021 1 PM

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா பாஸிட்டிவ்!

உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முதல் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ``எனக்கு ஆரம்பகால அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன்.

`தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று!’ - சுகாதாரத்துறை #NowAtVikatan
PremKumar SK

அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக முடிவுகள் வந்திருக்கிறது. தான் தற்போது என்னை தனிமைப் படுத்திக்கொண்டேன். மருத்துவர்களின் பரிந்துரை படி செயல்படுகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

14 Apr 2021 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 1,84,372 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,38,73,825 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல்
கொரோனா பெருந்தொற்றுப் பரவல்
Pixabay

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,027. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,72,085 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,23,36,036 ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 13,65,704 பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 11,11,79,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு